குடியாத்தம் அருகே பணி முடித்து திரும்பிய காவலர் வேன் மோதி உயிரிழப்பு.

வேலூர் மாவட்டம் குடியாத்தம் சுண்ணாம்பு பேட்டையைசேர்ந்தவர் பாலாஜி (35). இவர் ஆந்திர எல்லையில் உள்ள சோதனை சாவடியில் இரவு காவலராக பணியாற்றி வந்தார்.
நேற்று காலை பணி முடித்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டு இருந்தபோது சுமார் 8 மணியளவில் கொட்டமிட்டா சாலையில் எதிரே வந்த மினிவேன் மோதி சம்பவ இடத்தில் காவலர் பாலாஜி உயிரிழந்தார்.இது குறித்து குடியாத்தம் தாலுகா காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர்.

Be the first to comment

Leave a Reply