செங்கம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கம் சார்பில்சமத்துவ பொங்கல் விழா தலைவர் அப்துல் காதர் தலைமையில் நடைபெற்றது நிகழ்விற்கு கல்வியாளர் சி.மாணிக்கம் முன்னிலை வகித்தார்நிகழ்ச்சியின் முன்னதாக சங்கத்தின் செயலாளர் முனுசாமி அனைவரும் வரவேற்று பேசினார்ஊரடங்கு உத்தரவிற்கு பிறகு மாநில அரசே ஏழை எளியவர்களின் அடிப்படை தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்து விட முடியாது. தொண்டுள்ளம் கொண்ட மனிதர்களும் களத்தில் இறங்கினால் மட்டுமே மக்களின் தேவைகளை முழுமையாக பூர்த்தி செய்ய இயலும். அந்த வகையில் செங்கம் பகுதியைச் சார்ந்த தொண்டுள்ளம் கணேச கணேசர் குழுமத்தின் தலைவர் கஜேந்திரன், துணைத் தலைவர் ரவீந்திரன் ஆகியோருக்கு தன்னலம் கருதாத தொண்டுள்ளம் கோவிட் 19 தடுப்பூசி முகாம், தொடர்ந்து கண் சிகிச்சை முகாம், காது கேளாதவர்களுக்கு முகாம் ஏழை எளியவர்களுக்கு பலதரப்பட்ட சேவையைப் பாராட்டி விருதுகள் வழங்கி பாராட்டப்பட்டதுநிகழ்ச்சியில் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் சக்கரபாணி, நடராஜன், ராமன் ,துளசிலிங்கம், செய்யது அப்துல் கயும்: பத்மநாப மூர்த்தி, பொன் லோகனந்தம் சத்தியநாராயணன், தேவராஜன், ராஜமாணிக்கம், நடராஜன், துணைத் தலைவர் சுப்பிரமணி, முரளிதரன் முனுசாமி பொருளாளர் மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்

Be the first to comment

Leave a Reply