ஜமுனாமரத்தூர் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்.

திருவண்ணாமலை மாவட்ட கழக செயலாளர் அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி வழிகாட்டுதல்படி, ஜமுனாமரத்தூர் தெற்கு ஒன்றியம் பலாமரத்தூர் ஊராட்சி நல்லாப்பட்டு கிராமத்தில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் எம்.சி.அசோக் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பொங்கல் விழாவை துவக்கிவைத்து தூய்மைப் பணியாளர்கள், மேநீர் தேக்கத் தொட்டி இயக்குனர்கள், ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வேட்டி, சேலை ,சட்டை ,லுங்கி, ஜாக்கெட் பிட் ,நாள்காட்டி மற்றும் நாலாவது வார்டில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிறந்த குழந்தைகள் 13 நபர்களின் பெற்றோர்களுக்கு தலா ஆயிரம் ரூபாய் பரிசும் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை கிளைக் கழக செயலாளர் சேராமந்தை சி. முருகன செய்தார். நிகழ்ச்சியில் ஒன்றியக் கழக மூத்த நிர்வாகி மோலையனூர் பெ. வெள்ளையன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சி. சந்திரா ,கிளைக் கழக செயலாளர் நல்லாப்பட்டு சி .கோவிந்தராஜி, கழக நிர்வாகி புதூர் த.ராமன், *மேல்சிலம்படி ஊராட்சி தகவல் தொழில்நுட்பப் பிரிவு ஊராட்சி செயலாளர் சந்தோஷ் குமார், பாசறை அ. விஜய் சங்கரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply