மேலகரம் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் கொண்டாடிய தென்காசி காவல்துறையினர்..

தென்காசி காவல்துறையினர் மேலகரம் குழந்தைகள் காப்பகத்தில் பொங்கல் பண்டிகையை மகிச்சியுடன் கொண்டாடினர். அப்போது தென்காசி காவல் ஆய்வாளர் குழந்தைகளுக்கு புத்தாடைகள் வழங்கினார். தமிழரின் பண்பாட்டை வெளிப்படுத்தும் விதமாகவும், நண்பர்களையும் உறவினர்களையும் உபசரித்தல், உழவுத் தொழிலுக்கு பெருமை சேர்த்தல் போன்ற நற்பண்புகளின் அடையாளமாகவும் பொங்கல் பண்டிகை விளங்குகிறது. இந்த பொங்கல் பண்டிகையை அனைவரும் அவர்களது குடும்பத்துடன் மகிழ்வுடன் கொண்டாடுவது வழக்கமாக உள்ளது. இந்நிலையில் தென்காசி காவல் ஆய்வாளர் பாலமுருகன் மற்றும் காவல் ஆளிநர்கள் இணைந்து மேலகரம் பகுதியில் அமைந்துள்ள குழந்தைகள் காப்பகத்திற்கு சென்று அங்குள்ள குழந்தைகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடி அவர்களுக்கு புத்தாடைகளும் வழங்கி குழந்தைகளை மகிழ்வித்தனர். மேலும் கவனம் சிதறாமல் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து பெரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்பதே தங்களது குறிக்கோளாக இருக்க வேண்டும் எனவும் தென்காசி காவல்துறையினர் அறிவுரைகளை வழங்கினர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Be the first to comment

Leave a Reply