கணிதப் பகுப்பாய்விலும் வகைநுண் கலனத்திலும் பங்களிப்புகளைச் செலுத்திய, வட ஐரோப்பாவில் முதல் பெண் பேராசிரியரான சோஃபியா கோவலெவ்சுகாயா பிறந்த தினம் இன்று (ஜனவரி 15, 1850).

சோஃபியா வாசிலியேவ்னா கோவலெவ்சுகாயா (Sofia Vasilyevna Kovalevskaya) ஜனவரி 15, 1850ல் மாஸ்கோவில் பிறந்தார். அவரது தந்தை, லெப்டினன்ட் ஜெனரல் வாசிலி வாசிலியேவிச் கோர்வின்-க்ருகோவ்ஸ்கி, இம்பீரியல் ரஷ்ய இராணுவத்தில் மாஸ்கோ பீரங்கியின் தலைவராக பணியாற்றினார். கணிதத்தில் அவரது வெளிப்படையான திறமை இருந்தபோதிலும், அவளால் ரஷ்யாவில் தனது கல்வியை முடிக்க முடியவில்லை. அந்த நேரத்தில், ரஷ்யாவிலும் பிற நாடுகளிலும் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. வெளிநாட்டில் படிப்பதற்கு, கோவலெவ்ஸ்கயாவுக்கு அவரது தந்தையிடமிருந்து எழுத்துப்பூர்வ அனுமதி தேவைப்பட்டது. அதன்படி, 1868 ஆம் ஆண்டில், விளாடிமிர் கோவலெவ்ஸ்கிஜ், ஒரு இளம் பழங்காலவியல் மாணவர், புத்தக வெளியீட்டாளர் மற்றும் தீவிரவாதியுடன் ஒரு “கற்பனையான திருமணத்தை” ஒப்பந்தம் செய்தார். அவர் ரஷ்யாவில் சார்லஸ் டார்வின் படைப்புகளை முதன்முதலில் மொழிபெயர்த்து வெளியிட்டார். மேம்பட்ட படிப்புகளைத் தொடர அவர்கள் வியன்னாவில் சிறிது காலம் தங்கிய பின்னர் 1869ல் ரஷ்யாவிலிருந்து ஜெர்மனிக்குச் சென்றனர்.

சோனியா கோவலவ்சுகி உயர்நிலைப் பள்ளிக் கணித நாள் என்பது மகளிர் கணிதவியல் கழகம் நடத்தும் புது உருவாக்கத் திட்டமாகும். இது அமெரிக்காவில் நாடெங்கும் பணிப்பட்டறைகளை நடத்தி மகளிரைக் கணித ஆய்வில் ஆர்வமூட்டுகிறது. சோனியா கோவலவ்சுகி விரிவுரை என்ற நிகழ்ச்சியை AWM ஒவ்வோராண்டும் நடத்துகிறது. இதில் பயன்முறை, கணிப்பியல் கணிதவியலில் பங்காற்றிய பேராளுமைகளைப் பற்றிய உரைகள் ஆற்றப்படுகின்றன. முன்பு இந்நிகழ்ச்சியில் உரையாற்றிப் பெயர்பெற்றவர்களீல் இரீன் பொன்சேகா (2006), இங்கிரிடு டௌபெச்சீசு (2005), ஜாய்சு ஆர்.மெக்லௌலின் (2004), இலிண்டா ஆர். பெட்சோல்டு (2003) ஆகியோர் அடங்குவர். நிலாவின் குழிப்பள்ளம் ஒன்று கோவலவ்சுகாயா குழிப்பள்ளம் என வழங்கப்படுகிறது. செருமனியின் அலெக்சாந்தர் வான் ஃஅம்போல்ட் நிறுவனம் ஈராண்டுக்கொருமுறை ’சோபியா கோவலவ்சுகி விருதை’ இளம் ஆய்வாளர்களுக்குத் தருகிறது.

மூன்று திரைப்படத்திலும் தொலைக்காட்சி வாழ்க்கைத் தொடர்களிலும் சோஃபியா படப்பொருளாக அமைந்துள்ளார். ஒரு முதல் பேராளுமை வாய்ந்த பெண் கணிதவியலாளர் ஆவார். இவர் கணிதப் பகுப்பாய்விலும் வகைநுண் கலனத்திலும் இயக்கவியலிலும் மூலமுதல் பங்களிப்புகளைச் செலுத்தியுள்ளார். இவர்தான் வட ஐரோப்பாவில் முதன்முதலாகப் பேராசிரியரான பெண் ஆவார். ஓர் அறிவியல் இதழில் முதல் பெண் பதிப்பாசிரியராக விளங்கியவரும் இவரே. அவரது உருசியப் பெயர் பலவகைகளில் உரோம மயப்படுத்தப்படுவது உண்டு, என்றாலும் அவர் தம்மை எப்போதும் “சோஃபீ கோவலவ்சுகி” எனக் கூறிக்கொள்வார். கல்விப்பணி வெளியீடுகளில் மட்டும் (அவ்வப்போது “கோவலவ்சுகி”), எனவும் மாற்றிக்கொள்வார்.. சுவீடன் வந்ததும் தம்மைச் “சோனியா” என அழைத்துக்கொண்டார். வட ஐரோப்பாவில் முதல் பெண் பேராசிரியரான சோஃபியா கோவலெவ்சுகாயா பிப்ரவரி 10, 1891ல் தனது 44வது அகவையில் ஸ்டாக்ஹோம் சுவீடனில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.

Be the first to comment

Leave a Reply