கீழக்கரை அருகே புதிதாக திறக்கப்பட்ட “PAKKIRAPPA SEA PARK”..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே உள்ள பக்கீர் அப்பா தர்காவில் கீழக்கரையை சேர்ந்த தொழிலதிபர் அஸ்கர் என்பவர் பக்கீர் அப்பா கடல் பூங்கா என்ற பெயரில் பூங்கா ஒன்றை அமைத்துள்ளார் அதனை ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் திமுக மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் திறந்துவைத்தார்.

இந்நிகழ்ச்சியின்போது கீழக்கரை நகர் கழக செயலாளர் பசீர் அஹமத் இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான், கிளைச் செயலாளர் சுல்தான் செய்யது இபுராகிம் (எ)ராஜா தலைமை வைத்தனர் திருப்புல்லானி ஒன்றிய சேர்மன் புல்லாணி, மாவட்ட கவுன்சிலர் ஆதித்தியன், காஞ்சிரங்குடி பஞ்சாயத்து தலைவர் முனியசாமி முன்னிலை வகித்தனர், கலந்து கொண்ட அனைவரையும் பூங்காவின் உரிமையாளர் அஸ்கர் வரவேற்றார். இந்நிகழ்ச்சியின் போது திமுக மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Be the first to comment

Leave a Reply