மதுரை விமான நிலையத்திற்கு போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர் சந்தித்து பேட்டி.

அப்போது போக்குவரத்து துறையில் கூடுதலாக பணிபுரிந்த 119161 ஊழியர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத் தொகை முதலமைச்சர் வழங்கியுள்ளார்.தற்போது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் அழைத்து சென்று கொண்டிருக்கின்றனர் 3 நாள் மற்றும் முழு ஊரடங்கு முடிந்த பின்னர் மீண்டும் அழைத்து செல்வதற்கு ஏற்பாடுகள் செய்ய உள்ளோம்.இன்று சென்னை சென்று கோயம்பேடு, தாம்பரம் உள்ளிட்ட பணிமனைகளில் ஆய்வுகள் செய்ய உள்ளேன் பொதுமக்களுக்கு எந்த ஒரு இடையூறு இல்லாமல் தீபாவளிக்கு எப்படி கொண்டு சேர்த்தது போல் பொங்கலுக்கும் சேர்க்க உள்ளோம்.கொரோனா விதிமுறைகளை மீறி 75% சதவீதத்திற்கும் மேல் பேருந்துகளில் பயணம் செய்வது குறித்த கேள்விக்குதீபாவளி பண்டிகையை விட பொங்கல் பண்டிகை அதிக அளவு மக்கள் பயணம் செய்கின்றனர்., தமிழர்கள் பண்டிகை என்பதால் அதிக அளவு வருகின்றனர் அவர்களை பக்குவமாக கொண்டு சேர்ப்பதே போக்குவரத்தின் கடமை. எந்த ஒரு இடையூறின்றி தேவைக்கேற்ற பேருந்துகள் அனுமதிக்கப்படும் ‌.ஒமிக்ரான் பரிசோதனை தற்போது இல்லை, தற்போது அதிகமாக ஒமிக்ரான் தான் பரவுகிறது அதனால் கட்டாய முககவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என கூறியுள்ளோம்.பொங்கல் பண்டிகைக்கு செல்லும் மக்களை பாதுகாப்பாக கொண்டு சேர்ப்பதில் நமது தமிழ்நாடு முன்னணியில் உள்ளது., இதற்காக 20 ஆயிரம் பேருந்துகள் உள்ளது தற்போது 17,000 பேருந்துகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதனால் எந்த பிரச்சனையும் இருக்காது.பள்ளி மாணவர்கள் தொடர்ந்து அரசுப் பேருந்துகளை சேதப்படுத்தி வருகின்றனர் இது குறித்த கேள்விக்கு.இளைஞர்கள் அப்படித்தான் இருப்பார்கள்., அவர்களை ஆர்.டி.ஓ போலீசார் வரிசைப்படுத்தி ஏற்றி விடும் நிகழ்வு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது., மாணவர்களை சட்டம் ஒழுங்கு பிரச்சினை வராமல் பாதுகாத்து கொண்டு செல்கிறோம். இவ்வாறு கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Be the first to comment

Leave a Reply