உசிலம்பட்டியில் களை கட்டாத பொங்கல் விற்பனை. வியாபாரிகள் ஏமாற்றம்

தமிழர் திருநாளாம் தைத்திருநாள் தமிழகத்தில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இம்முறை தொடர்ச்சியாக 5 நாட்;கள் விடுமுறை வருவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பொங்கலையொட்டி காய்கறிச் சந்தை பூ சந்தை மற்றும் தேவர் சிலை வளாகப்பகுதிகளில் கரும்பு விற்பனை நடைபெறும். ஒவ்வொரு வருடமும் பொங்கலுக்கு 3 தினங்களுக்கு முன்பே பொங்கல் வியாபாரம் களை கட்டும்.ஆனால் இம்முறை கொரோனா அச்சத்தின் காரணமாக மக்கள் நடமாட்டம் இல்லாததால் உசிலம்பட்டியின் முக்கியப்பகுதிகளில் ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகிறது.

கடந்த வருடம் கரும்பு கட்டு (15எண்ணிக்கை) ரூ550க்;கு நடைபெற்ற நிலையில் இந்த வருடம்; கட்டு ரூ250க்கு விற்றால் கூட வாங்க ஆளில்லை என கரும்பு வியாபாரிகள் தெரிவித்தனர்.இதனால் தங்களுக்கு நஷ்டம் ஏற்ப்பட்டுள்ளாதாக கவலை தெரிவித்தனர்.மேலும் உசிலம்பட்டி பூ சந்தையில் விலை இருந்தும் வரத்து இல்லை. மல்லிகை ரூ2000 கனகாம்பரம் ரூ800 காக்கரட்டான் ரூ1500 பூக்கள் விற்பனை நடைபெறுகிறது.ஆனால் வரத்து இல்லாததால் மார்க்கெட் வெறிச்சோடிக் காணப்படுகிறது.மேலும் பொங்கலுக்கு அதிகம் விற்பனையாகும் பூசனி மஞ்சள் கிழங்கு வர்ணப்பொடிகள் போன்றவை அதிகளவில் மார்க்கெட்;டிற்கு வந்துள்ள போதும் மக்கள் நடமாட்டம் இல்லாததால் விற்பனை களைகட்டவில்லை.

உசிலை சிந்தனியா

Be the first to comment

Leave a Reply