சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகைக்கு ஜன.15 வரை விண்ணப்பிக்கலாம்: தென்காசி மாவட்ட ஆட்சியர் தகவல்.

சிறுபான்மையின மாணவ மாணவிகள் 2021-22 ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகைக்கு ஜனவரி 15 வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும்,இந்த கால அளவிற்குள் தகுதி உடைய மாணவ மாணவிகள் விண்ணப்பித்து பயனடையலாம் எனவும் தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் தெரிவித்துள்ளார். சிறுபான்மையின மாணவ மாணவியர்களுக்கு பள்ளிப்படிப்பு,பள்ளி மேற்படிப்பு மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2021-22 கல்வியாண்டில் உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பிக்கும் நாட்கள் ஜன.15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் பதினொன்றாம் வகுப்பு முதல் பி.எச்.டி படிப்பு வரை (தொழிற்கல்வி, தொழில்நுட்பகல்வி, மருத்துவம் உட்பட) பயிலும் இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்தமத்தின பார்சிகள் மற்றும் ஜெயினர்கள் ஆகிய சிறுபான்மையின மாணவ மாணவியரிடமிருந்து 2021-2022-ஆம் ஆண்டிற்கு ஒன்றிய அரசின் பள்ளி மேற்படிப்பு, தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் (புதியது மற்றும் புதுப்பித்தல்) உதவித்தொகை பெறுவதற்கானவிண்ணப்பங்கள் இணையதளம் மூலம் www.scholarships.gov.in என்ற முகவரியில்விண்ணப்பிக்க 15.01.2022 வரை காலநீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. தகுதி வாய்ந்த சிறுபான்மையின மாணவ மாணவியர்கள்மேற்படி காலக்கெடுவிற்குள் விண்ணப்பித்து பயனடையலாம் என தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.கோபால சுந்தர ராஜ் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Be the first to comment

Leave a Reply