திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இணைய வழியில் நடந்த இளைஞர்கள் தின கருத்தரங்கம்..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் இளைஞர் தின சிறப்பு கருத்தரங்கம் இணைய வழியில் நடந்தது. மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் பங்கேற்று கருத்துக்களை பதிவு செய்தனர். நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏராளமான நிகழ்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. அவற்றுள் ஒன்றாக சுவாமி விவேகானந்தர் பிறந்த தினத்தை முன்னிட்டு தேசிய இளைஞர் தின இணையவழி கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்தியவள்ளி தலைமை வகித்தார் . பொதிகை தமிழ் சங்க தலைவர் கவிஞர் பே. ராஜேந்திரன் முன்னிலை உரையாற்றினார். கருத்தரங்கில் கொ.ரேணுகா வணிகவியல் துறை, தூய யோவான் கல்லூரி,பாளையங் கோட்டை,ந‌.நந்தினி பி.எ சமூகவியல் இராணி அண்ணா அரசு மகளிர் கலைக் கல்லூரி, திருநெல்வேலி, சா.சூர்யா  வரலாற்று துறை,தூய யோவான் கல்லூரி,பாளையங்கோட்டை, ஆறுமுக வடிவு.சே, சவேரியார் கல்லூரி, வெ.பானுமதி  தூய சவேரியார் கல்லூரி பாளையங்கோட்டை ஆகிய மாணவ மாணவிகள் பங்கேற்று உரை நிகழ்த்தினர். டமுத்ரா,என்கிற 3 ஆம் வகுப்பு படிக்கும் நாகர்கோயில் பகுதி பள்ளி மாணவர் விவேகானந்தர் போல் உடை அணிந்து அவரின் பொன்மொழிகளை கூறியது அனைவரையும் கவர்ந்தது. ஜான்ஸ் கல்லூரி வரலாற்றுத் துறை மாணவர் சூர்யா நிகழ்வின் இறுதியில் நன்றியுரை ஆற்றினார்.

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் “நூறாண்டு கடந்தும் பாவாண்டு நிற்கும் பாரதி” என்ற தலைப்பில் 31- நாட்களாக நடந்து வந்த தொடர் நிகழ்ச்சி ஜனவரி 11 அன்று நிறைவு பெற்றது. மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு நிகழ்ச்சிகளின் தொடர் நிகழ்ச்சியாக நெல்லை அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து நடத்திய இணையவழி நிகழ்ச்சி 2021-டிசம்பர் 12-ல் தொடங்கி 2022 ஜனவரி 11- வரை தொடர்ந்து நாள்தோறும் இணைய வழியில் நடைபெற்று வந்தது. அதன் நிறைவு தின நிகழ்ச்சி ஜனவரி 11-அன்று நடைபெற்றது. பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் தலைமையுரை வழங்கினார். நிகழ்ச்சியில் பாரதியாரின் கொள்ளுப் பேத்தி ஆர்.உமாபாரதி முதலாவதாக பேசினார். தமிழ்நாடு சுகாதாரம் மற்றும் மருத்துவ இணை இயக்குநர் மருத்துவர் ஜெய ராஜமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி நிறைவுரையாற்றினார். வி.ஜி.பி.உலகத் தமிழ்ச் சங்கத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம்,சிட்னி தமிழ் வளர்ச்சி மன்ற நிறுவனர் முனைவர் சௌந்தரியா சுப்ரமண்யன், இலண்டன் கவிஞர் புதுயுகன்,ஜெர்மனி இளம்பொறியாளர் ஜோசபின் ரம்யா,ஹாங்காங் பல்கலைக்கழக விரிவுரையாளர் சித்ரா,துபாய் முனைவர் முகமது முகைதீன், பெங்களூரு மென்பொறியாளர் மல்லிகா,சென்னை அருங்காட்சியக காப்பாட்சியர் சுந்தரராஜன், திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் உயராய்வுத் துறைத் தலைவர் முனைவர் கவிதா,இராஜபாளையம் புலவர் அனிதா, கள்ளக் குறிச்சி மாவட்ட தமிழாசிரியர் ஸ்ரீராம் உட்பட பலர் நாள்தோறும் கலந்துகொண்டு உரையாற்றினர். சங்கரன் கோவில் மக்கள் பாடகர் திருவுடையான் கலைக்குழுவைச் சேர்ந்த தண்டாயுதபாணி பாரதி பாடல்களை பாடினார். ஆழ்வார்குறிச்சி குட் ஷெப்பர்டுபள்ளி, கோவில்பட்டி ராவிள்ளா வித்யாலயா, திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரி உட்பட பல கல்வி நிறுவனங்களின் மாணவ மாணவிகளின் உரை, கவிதை வாசிப்பு,பாடல் மற்றும் நடனம் என பலதரப்பட்ட நிகழ்ச்சிகளும் ஒவ்வொரு நாளாக நடைபெற்றது.31- நாட்களிலும் சிறப்பான ஏற்பாடுகள் அரசு அருங்காட்சியக மாவட்ட காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பே.இராஜேந்திரன் ஆகியோர் செய்திருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Be the first to comment

Leave a Reply