Home செய்திகள் சென்னையில் நடைபெற்ற மக்கள் விசாரணை பத்திரிகையின் முப்பெரும் விழா.

சென்னையில் நடைபெற்ற மக்கள் விசாரணை பத்திரிகையின் முப்பெரும் விழா.

by mohan

சென்னையில் டால்பின் பார்க்  இந்திய சிறு பத்திரிகையாளர்களின் தமிழ்நாடு நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா, அகில இந்திய சிறு பத்திரிகையாளர் சங்கத்தின் தமிழ்நாடு மாநில அலுவலக திறப்பு விழா, மக்கள் விசாரணை பத்திரிகையின் பத்தாம் ஆண்டு விழா என முப்பெரும் விழா நடைபெற்றது. விழாவில் அதில் இந்திய சிறு பத்திரிக்கையாளர்களின் சங்கத்தின் தேசிய தலைவர் சிவசங்கர் திரிபாதி, அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய செயலர் மற்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் ஆர்த்தி திரிபாதி , அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தென்னிந்தியத் தலைவர் ஸ்ரீராம் ஜி அவர்களும் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தார்கள். விழாவில், அகில இந்திய பத்திரிகையாளர் சங்கத்தின் தேசிய தலைவர் திரிபாதி ஜி  சார்பாக அவரது ஆங்கில உரையை தற்போதைய பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர், ஆர்த்தி திரிபாதி வாசித்தார்கள்.

அவரது உரையின் முக்கிய சாராம்சம்.1982 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கம் இன்றளவும் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர்களை பாதுகாக்கும் பொருட்டு தொடர்ச்சியான பல ஆலோசனைகளை அரசுக்கு வழங்கி சிறு பத்திரிக்கையாளர்களை பாதுகாத்து வருகிறது. இச்சங்கமானது சிறு பத்திரிகையாளர்களுக்கு அவ்வப்போது ஏற்படுகின்ற சவாலான பிரச்சினைகளை மத்திய அரசுக்கு எடுத்துரைத்து விரைவாகத் தீர்வுகளை கண்டு வருகிறது. சிறு பத்திரிகைகளின் முன்னேற்றம்தான் இச் சங்கத்தின் முக்கிய குறிக்கோளாக உள்ளது. 2015 -16 இல் மத்திய அரசின் விளம்பரத்துறையான டி.ஏ.வி.பி கொண்டுவந்த புதிய விளம்பர கொள்கை பல சிறு-குறு பத்திரிகையாளர்களின் முன்னேற்றத்தை தடுக்கின்ற வகையில் இருந்தது. இச்சங்கம் அதனை முன்னெடுத்து மத்திய அரசுக்கு எடுத்துக் கூறி, அவற்றில் சிறுபத்திரிகைகள் பாதிக்காத வகையில் தளர்வுகளைக் கொண்டுவந்துதது. கொரானா காலத்தில் இறந்த இளம்க்ஷ பத்திரிக்கையாளர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி ரூபாய் 10 லட்சத்திலிருந்து 50 லட்சம் ஆக உயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை அரசிடம் வைத்தது. கொரானா காலத்தில் பத்திரிகையாளர்களுக்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைக்கக்கோரி 30 மாநில முதல்வர்களுக்கு கடிதங்கள் மற்றும் ஈமெயில் வழியாக தெரிவிக்கப்பட்டது. 2018 முதல் 2021 வரை உள்ள காலகட்டத்தில் ஏற்பட்ட காகித விலை செலவினம் அதிகரித்தது குறித்தும் அரசிடம் தெரிவிக்கப்பட்டது. 2018 முதல் 2021 வரை ஐந்து ஆண்டுகளில் பத்திரிக்கை பதிப்பிப்பதற்கான செலவினங்கள் ஆன அச்சக காகித விலை, உயர்வு. மை,வேதியியல் பொருட்கள், மின்சாரம், போக்குவரத்து, வேலையாட்கள் கூலி உயர்வு, என அனைத்து நிலைகளிலும் ஏற்பட்டுள்ள விலை ஏற்றத்தை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்றது. இந்த காலகட்டங்களில் டி. ஏ. வி. பி.மூலம் கொடுக்கின்ற அரசு விளம்பர வருவாய் சிறு பத்திரிக்கைகளுக்கு பூஜ்ஜியமாக இருந்ததையும் சுட்டிக் காட்டியது, தேசிய தின விளம்பரங்களான ஜனவரி 26,ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய தேசிய விழா விளம்பரங்கள் சிறுபத்திரிகைகளில் வழங்கப்படவில்லை என்பதையும் குறிப்பிட்டார். ஏற்கனவே ஜி.எஸ்.டி. யால் சிறு பத்திரிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றார். அரசின் விளம்பர கட்டணத்தை 3 முதல் 4 மடங்கு உயர்த்த வேண்டும் என்றும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் கேட்டுக்கொண்டார். மேலும் டி.ஏ.வி. பி. மற்றும் ஆர். என். ஐ . ஆல் நிர்வாக ரீதியாக ஏற்படுகின்ற காலதாமதத்தை உடனடியாக போக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் தெரிவித்துள்ளார். விழாவில் அகில இந்திய சிறு பத்திரிக்கையாளர் சங்கத்தின் தேசிய செயலர் சிவசங்கர் திரிபாதி அவர்களும் பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் உறுப்பினர் ஆர்த்தி திரிபாதி  நிர்வாகிகளுக்கு அடையாள அட்டையையும், நினைவுப் பரிசையும் வழங்கி கௌரவித்ததோடு, மக்கள் விசாரணை பத்திரிக்கையில் 10 ஆண்டுகளாக சிறப்பாக பணிபுரிந்த பத்திரிகையாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தார்கள். விழாவிற்கு கல்வி டுடே பத்திரிகையின் ஆசிரியர், AISNA சங்கத்தின் தமிழக தலைவர் ராமசுப்ரமணியன்,முன்னிலைவகுத்தார். ,மக்கள் விசாரணை பத்திரிகையின் ஆசிரியர், சங்கத்தின் பொதுச் செயலாளர் முனைவர் ஆ.மவுரியன்  தலைமை ஏற்றார்.விழாவிற்கான ஏற்பாடுகளை AISNA இன் பொருளாளர் வி.அருணாச்சலம், செயலாளர் ராமச்சந்திரன், துணை செயலாளர் ரமேஷ் குமார், பொதிகை சங்கர், மக்கள் விசாரணை பத்திரிக்கையின் இணைய ஆசிரியர் ஆ.தே.முருகையன், துணை ஆசிரியர் ஏசி குமார், அலுவலக நிர்வாகிகள் சிவசங்கர் ,சுரேஷ், சச்சின் உட்பட பலரும் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தனர். விழாவில், 200க்கும் மேற்பட்ட பதிப்பாளர்கள், பத்திரிகையாளர்கள், புகைப்பட நிபுணர்கள், வீடியோக்கிராபர்கள், செய்தியாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!