பொியகட்டளையில் பெண்சிசு உயிரிழந்த சம்பவம் – தலைமறைவாக இருந்த பெற்றோா்கள் கைது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே பெரிய கட்டளை கிராமத்தைச் சேர்ந்த முத்துப்பாண்டி.விவசாயக் கூலி.ஆடு மேய்க்கும் தொழில் செய்து வருகின்;றார்..இவருக்கும் கௌசல்யா என்பவருக்கும் திருமணமாகி ஏற்கனவே 4 வயது மற்றும் 2 வயதில் இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில் கௌசல்யா கர்ப்பமாகி கடந்த 21ஆம் தேதி சேடபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்துள்ளது.இந்த குழந்தை உடல்நல குறைவு காரணமாக 26.12.2021 அன்று இரவில் உயிரிழந்தாக வீட்டின் அருகிலேயே பெற்றோர் புதைத்துவிட்டதாகக் கூறப்படுகிறது..இதில் சந்தேகமடைந்த செவிலியர் தேவி கிராம நிhவாக அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளார்.இது குறித்து தகலறிந்த சேடபட்டி கிராம நிர்வாக அலுவலர் முணியாண்டி சேடபட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.இதன் அடிப்படையில் சேடபட்டி காவல் நிலைய போலிசார் வழக்கு பதிவு செய்து பெண் சிசு கொலையா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்., மேலும் முத்துப்பாண்டி வீட்டிற்குச் சென்று பார்த்த போது வீட்டில் யாருமில்லாமல் வீடு பூட்டப்பட்டிருந்தது.; தலைமறைவான பெற்றோர்களை போலிசார் தேடி வந்த நிலையில மதுரை அரசு மருத்துவர் நடராஜன் தலைமையிலான மருத்துவகுழுவினர் பெண் சிசுவின் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். குழந்தையின் கன்னத்தில் தலையில் காயங்கள் இருப்பதாகவும் பிரேத பரிசோதனைக்குப்பின் முடிவு தெரியும் என மருத்துவர்கள் கூறினர்.இந்நிலையில் தலைமறைவான குழந்தையின் பெற்றோர் முத்துப்பாண்டி கௌசல்யாவை சேடபட்டி போலிசார் பேரையூரில் அவரது உறவினர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.இதில் முத்துப்பாண்டி அளித்துள்ள வாக்குமூலத்தில்தற்போது குடும்பம் வறுமையில் உள்ள நிலையில் 3வது பெண்குழுந்தை பிறந்ததால் தனக்கும் கௌசல்யாவிற்கும் சம்பவத்தன்று சண்டை வந்ததாகவும் இதில் ஆத்திரத்தில் பெண்சிசுவை சுவற்றில் அடித்து கொலை செய்து உடலை வீட்டின் முன் புதைத்தாகவும் பின் போலிசாருக்குப் பயந்து தலைமறைவனாதாகவும் தெரிவித்துள்ளார்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..