Home செய்திகள் மதுரையில் கெரானா – ஒமிக்ரான் இல்லா புத்தாண்டை வரவேற்க யோகா செய்து அசத்திய சகோதரர்கள்.,

மதுரையில் கெரானா – ஒமிக்ரான் இல்லா புத்தாண்டை வரவேற்க யோகா செய்து அசத்திய சகோதரர்கள்.,

by mohan

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் – அசாருதின். – சல்மான்கான் சகோதரர்கள்.இவர்கள் யோகா பயிற்ச்சி மூலம் இந்திய, சர்வதேச சாதனைகள் புரிந்த யோகா சகோதரர்கள்.வரவிருக்கும் 2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாகவும்.,பத்மாசனம், வஜ்ராசனம், தனுர் ஆசனம், விருச்சி, ஓம் கார் ஆசனம் உள்ளிட்ட யோக ஆசனங்கள் ஜஸ்கட்டியில் செய்தனர்.தற்காப்பு கலையான தமிழர் பாராம்பரிய சிலம்ப விளாட்டில் பெண் குழந்தைகளுக்கு பயிற்சி அளித்து. அவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட ஊக்குவிக்கின்றனர்.மேலும் தமிழக அரசின் மஞ்சப்பை திட்டத்தை வெளிப்படுத்தும் விதமாக யோக சிலம்ப மாணவர்களுக்கு சுற்று சூழலை பாதுகாக்கும் விதமாக உறுதி மொழி எடுத்து நூதன விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியை சேர்ந்த அசாருதீன்- சல்மான் சகோதரர்கள் இவர்கள் யோகாகலையில் பல்வேறு சாதனைகள் புரிந்துள்ளனர். மேலும்., இப்பகுதியில் சிறிய அளவில் பள்ளி சிறுவர்கள்-சிறுமியர்களுக்கு தற்காப்பு கலைகளான சிலம்பம் உள்ளிட்ட கலைகளுடன் உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள யோகா சொல்லி கொடுக்கின்றனர். 30 மாணவர்களுக்கு யோகா மற்றும் சிலம்பம் சொல்லி கொடுத்து சிறிய அசார்சல்மான் யோகா பயிற்ச்சி பள்ளி ஒன்றை நடத்தி வருகின்றனர்.வரவிருக்கும் 2022 ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா நோயிலிருந்து பொதுமக்கள் பாதுக்காக்க சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், முகக்கவசம் அணிதல், தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளுதல் உள்ளிட்டவைகளை விளக்கும் விதமாகவும்., பூக்களால் அலங்கரிக்கப்பட்ட கொரோனா படம் வரைந்தும் இந்தியா வரைபடத்தை பூவினால் வரைந்து., ஐஸ் கட்டியில் அமர்ந்து பல்வேறு ஆசனங்கள் செய்து அசத்தினர்.தொடர்ந்து. சுற்று சூழலை பாதுகாக்க தமிழக அரசின் பிளாஸ்டிக் இல்லா மாநிலமாக மாற்றுவதற்கு மஞ்சப்பை திட்டத்தை அறிமுகப்படுத்தியதை பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக தனது யோகா பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு மஞ்சப்பை வழங்கி பிளாஸ்டிக் இல்லா தமிழகத்தை மாற்றுவோம் என்று உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!