விமர்சையாக நடைபெற்ற கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் சார்பில் 40-வது ஆண்டு ரூபி ஜுப்லி புத்தக வெளியீட்டு விழா..

கீழக்கரை இஸ்லாமிய கல்வி நிறுவனத்தின் சார்பில் 40-வது ஆண்டு ரூபி ஜுப்லி புத்தக வெளியீட்டு விழா இஸ்லாமியா கல்வி அபிவிருத்தி குழு துணைத்தலைவர் புகாரி தலைமையில் நடந்தது. முன்னதாக மாணவி ஷமிஹா கிராஅத் ஓதினார். மாணவர் சயாஸ் கபீர் வரவேற்றார். பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் அறிமுக உரையாற்றினார்.
முகம்மது சதக் அறக்கட்டளை தலைவர் யூசுப் சாகிப் ரூபி ஜுப்லி புத்தகத்தை வெளியிட்டார். துபாய் ஈமான் அமைப்பின் தலைவர் ஹபிபுல்லா கான் பெற்றுக் கொண்டார்.
விழாவில் மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் எம்.கே.இ.உமர், பைத்துல்மால் துணைத் தலைவர்  முகைதீன் தம்பி, நிர்வாகி ரபீக் சாதிக், மேலத்தெரு சங்க செயலாளர் சதக் அன்சாரி, வடக்கு தெரு ஜமாஅத் நிர்வாகி அக்பர் கான், ஹமீதியா தொடக்கப் பள்ளி முன்னாள் தாளாளர் சிராஜ்தீன், வடக்குத்தெரு ஆபித் அலி,  முன்னாள் கவுன்சிலர்  எம்.எம்.கே. முகம்மது காசிம், முகம்மது சதக் பாலிடெக்னிக் முதல்வர் அலாவுதீன், தாசிம்பீவி மகளிர் கல்லூரி முதல்வர் சுமையா, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராசிக்தீன், வழக்கறிஞர் ஹமீது சுல்தான், மக்தூமியா பள்ளி தாளாளர் இப்திகார் உசேன், தெற்குத்தெரு ஜமாத் நிர்வாகி நிஸ்பர், தில்லையேந்தல் ஊராட்சி  தலைவர் கிருஷ்ணமூர்த்தி,  தில்லையேந்தல் ரகுமான், ரோட்டரி நிர்வாகிகள் ஹசனுதீன், சுந்தரம்,  கெஜி, கீழக்கரை நகராட்சி முன்னாள் துணைத்தலைவர் ஹாஜா முகைதீன், , சதக்கத்துன் ஜாரியா பள்ளி நிர்வாகி ஜமாலுதீன், ஆசிரியர் (ஓய்வு)ஆபிதா, ஹமீதியா தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் ஹமீது நிஷா மற்றும் கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகளும், அனைத்து சமுதாய நிர்வாகிகளும், பழைய மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுநல அமைப்பு நிர்வாகிகள் என பல்வேறு தரப்பினரும் இந்த விழாவில்  கலந்து கொண்டனர்.
விழா நிகழ்ச்சிகளை ஆசிரியை நவ்சாத் பேகம், மாணவிகள் பாத்திமா நுஹா. ருக்கையா ஆகியோர் தொகுத்து வழங்கினர். மாணவர் சுல்தான் இப்ராஹிம் நன்றி கூறினார். விழா ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் எம்.எம்.கே. முகைதீன் இப்ராகிம் ஆலோசனையின்படி பள்ளி முதல்வர் மேபல் ஜஸ்டஸ், நிர்வாக அலுவலர் மலைச்சாமி மற்றும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,  அலுவலர்கள் செய்தனர்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..