போலி விசா குறித்து விசாரணை நடத்த கீழக்கரை வந்த டெல்லி போலீசாருக்கும், இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் போலி விசா குறித்து விசாரணை நடத்த கீழக்கரை வந்த டெல்லி போலீசாருக்கும் உள்ளுர் இளைஞர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஒருவர் கை உடைக்கப்பட்டதால் கீழக்கரையில் பரபரப்பு ஏற்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சேர்ந்தவர் மணிகண்டன். இவர் வேலை ஏமன் நாட்டிற்கு சென்றுள்ளார். ஏமன் நாட்டிற்கு விமானத்தில் இறங்கிய மணிகண்டனை ஏமன் சுங்க இலாகா அதிகாரிகள் அவரிடம் உள்ள விசாவை சோதனை செய்ததில் அது போலி விசா என தெரிய வந்ததைடுத்து ஏமன் விமான நிலைய அதிகாரிகள் மணிகண்டனை டெல்லிக்கு திருப்பி அனுப்பினர். இதனால் மணிகண்டனை கைது செய்த டெல்லி விமான நிலைய போலீசார்; அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர்.

மணிகண்டனிடம் நடத்திய விசாரனையில் ராமநாதபுரம் மாவட்டம்; கீழக்கரையை சேர்ந்த டிராவல் ஏஜெண்ட் பக்ருதீன் என்பவர் தன்னிடம் பணம் பெற்று கொண்டு போலி விசாவை தயாரித்து கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து டெல்லி போலீசார் கீழக்கையை சேர்ந்த பக்ருதீனிடம் விசாரணை நடத்தி கைது செய்து டெல்லி அழைத்து செல்ல இன்று கீழக்கரை வந்துள்ளனர். கீழக்கரைக்கு வந்த போலீசார் தேடி வந்த பக்ரூதினுக்கு பதிலாக கீழக்கரையில் டிராவல் ஏஜெண்டாக இருக்கும் நசின் என்பவரிடம் பக்ருதீன் என நினைத்து விசாரித்துள்ளனர்.

கீழக்கரை வந்த டெல்லி போலீசார் சீருடை அணியாமல் விசாரணை நடத்தியதால் சந்தேகம் அடைந்த நபீல்லுக்கும்; டெல்லி போலீசாரிடம்இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின் டெல்லி போலீசார் நபீல் மொபைலை கேட்டுள்ளனர். நபீல் மொபைலை கொடுக்க மறுத்துள்ளார். இதனையடுத்து டெல்லி போலீசார் நபீல்லிடம் இருந்த போனை வழுக்கட்டாயமாக பறித்த போது கைகலப்பு ஏற்பட்டுள்ளது.

இதனை கண்ட உள்ளூர் இளைஞர்கள் போலீசார் எனத்தெரியாமல் போலீசரை அடித்துள்ளனர். இதில் போலீசார் தாக்கியதில் நபீல்லுக்கு கை எலும்பு உடைந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்த தகவலறிந்த சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை போலீசார் டெல்லி போலீசாரையும், கைகலப்பில் கை உடைந்த நபீல்லையும் கீழக்கரை காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.

பின்னர் காவல் நிலையத்தில் டெல்லியில் இருந்து விசாரணைக்கு வரும் முன் உள்ளுர் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க வேண்டும். ஆனால் டெல்லி போலீசார் தரப்பில் இருந்து ஏன் கீழக்கரை போலீசாருக்கு எந்த தகவல் அளிக்கவில்லை என கீழக்கரை துணை கண்காணிப்பாளர் கேள்வி எழுப்பினார். எனவே இனி வரும் காலங்களில் காவல் நிலையத்தில் தகவல் கொடுத்து விட்டு விசாரணை செய்யும்மாறு டெல்லி போலீசாருக்கு கீழக்கரை காவல் துணை கண்காணிப்பாளர் சுபாஷ் அறிவுறுத்தினர்.

கீழக்கரையை சேர்ந்த பக்ருதீனை நேரில் ஆஜராகும் படி டெல்லி போலீசார் சம்மன் வழங்கியுள்ளனர். டெல்லி போலீசாருக்கும் உள்ளூர் இளைஞர்களுக்கும் ஏற்பட்ட கைகலப்பால் கீழக்கரையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை விசாரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களை செய்தி சேகரிக்க விடாமல் கீழக்கரை சிறப்பு சார்பு ஆய்வாளர் தேவேந்திரன் காவல் நிலையத்தின் முன் பக்க கேட்டை இழுத்து மூட உத்தரவிட்டார்.

புனித ரமலான் வாழ்த்துக்கள்..