Home செய்திகள் உசிலம்பட்டியில் செயற்கை குடிநீர் பஞ்சத்தை உருவாக்க முயலும் பொதுப்பணித் துறையினர்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியைப்பாதிக்குமா ???

உசிலம்பட்டியில் செயற்கை குடிநீர் பஞ்சத்தை உருவாக்க முயலும் பொதுப்பணித் துறையினர்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுகவின் வெற்றியைப்பாதிக்குமா ???

by mohan

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி நகராட்சி பகுதி 24 வார்டுகளை உள்ளடக்கியதாகும்.கிட்டத்தட்ட 31 ஆயிரம் வாக்காளர்களையும் 60 ஆயிரம் பொதுமக்களும் வசிக்கும் பகுதியாகும்.உசிலம்பட்டி நகருக்கு குடிநீருக்கு ஆதாரமாக விளங்குவது உசிலம்பட்டி பேருந்து நிலையம் அருகிலுள்ள கண்மாய் மற்றும் கருக்கட்டாண்பட்டி கண்மாய்களாகும் .இக்கண்மாய்கள் நிரம்பினால் மட்டுமே உசிலம்பட்டி நகர் பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் நிரம்பி உசிலம்பட்டி நகருக்கு குடிநீர் பஞ்சம் வராது..இதில் 60ஏக்கர் பரப்பளவு கொண்ட உசிலம்பட்டி கண்மாய் நீண்ட வருடங்களாக தூர் வாரப்படாமல் சீPமை கருவேல மரங்கள் முளைத்துக் கிடைத்து இருந்தது.இச்சமயங்களில் உசிலம்பட்டி நகரில் நிலத்தடி நீர் மட்டம் 1500அடிக்கு கீழ் சென்ற வரலாறும் உண்டு.இந்நிலையில் சிலதனியார் தொண்டு நிறுவனங்களின் சார்பில் கண்மாய் தூர்வாரப்பட்டாலும் வருணபகவான் கைகொடுக்காததால் மீண்டும் சீமை கருவேல மரங்கள் வளர்ந்து வறட்சியே நிலவியது.

இந்நிலையில் தூர்வாரும் பணியை கையிலெடுத்த சௌந்திரபாண்டியன் தலைமையிலான 58 கிராம இளைஞர் குழுவின் இளைஞர்கள் குறைந்த நாளில் குறைந்த செலவில் தூர்வாரி சீரமைத்து சீமைக்கருவேலமரங்களை அகற்றினர்.இவ்வேளையில் வருணபகவான் கைகொடுக்க மற்றும் 58 கிராம கால்வாயில் சோதனை ஓட்டம் நடைபெற இரண்டு நீராலும் கண்மாய் ஓரளவு நிரம்பியது.இதனால் 1000 அடிக்கு போர் போட்டு மோட்டார் மாட்டி தண்ணீர் இல்லை என்ற வீடுகளில் 300அடிக்கும் மேல் போரில் தண்ணீர் உள்ளது என்ற நிலை உருவானது.இதனால் கடந்த சில வருடங்களுக்கு முன் உசிலம்பட்டி நகராட்சி பகுதிகளில் மக்கள் தண்ணீர் கேட்டு தினந்தோறும் சாலை மறியலில் ஈடுபடுவது வாடிக்கையாக இருந்த நிலை மாறி தற்போது தண்ணீருக்காக போராடுவது அரிதான விஷயமாகி விட்டது.கடந்த 4 வருடங்களுக்கு முன் வீதி தோறும் காட்சிப்பொருளாக காட்சியளித்த அரசால் அமைக்கப்பட்ட சின்டெக்ஸ் டேங்குகளில் இன்று அமுதசுரபி போல் தண்ணீர் வந்து கொண்டு இருப்பதால் மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் தங்கள் பணியை கவனித்துக் கொண்டு உள்ளனர்.

பின்னர் உசிலம்பட்டி நகரப்பகுதிகளின் நிலத்தடிநீர் மட்டத்திற்கு ஆதராமான மற்றொரு கண்மாயான 16 ஏக்கர் பரப்பளவு கொண்ட கருக்கட்டாண்பட்டி கண்மாயை சீரமைக்கும் பணியில் இறங்கினர்.கிட்டத்தட்ட 10 அடி ஆழத்திற்கு கண்மாயில் புதைந்திருந்த பிளாஸ்டிக் கழிவுகளையும் சீமை கருவேல காடாக இருந்த மரங்களையும் அகற்றி வரத்து கால்வாய்களையும் சீரமைத்தனர்.இதில் இவ்விரு கண்மாய்களுமே மழைநீராலும் 58 கிராம கால்வாயில் வரும் தண்ணீரால் மட்டுமே நிறையும்.

இந்நிலையில் கருக்கட்டாண்பட்டி கண்மாய்க்கு 58 கிராம கால்வாய்த்திட்டம் மூலம் 4 நாட்களுக்கும் குறைவாகவே தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது.இதன்மூலம் 25சதவிகித கண்மாய் கூட நிரம்பவில்லை.இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்ட பொழுது எங்களுக்கு வந்த உத்தரவு அப்படித்தான் உள்ளது எனக் கூறியுள்ளனர்.ஆனால் சில கிராமங்களுக்கு 10 நாட்;;;;களுக்கு மேல் தண்ணீர் விடப்பட்டுள்ளது குறித்தும் சீகைக்கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள கண்மாய்களுக்கு முழுக்கண்மாய் நிரம்பும் அளவு தண்ணீர் விடப்பட்டது குறித்;து இளைஞர்கள் சுட்டிக்காட்டிய பொழுது உங்;களுக்கு பதில் சொல்லி எங்கள் நேரத்தை வீணாக்க விரும்பவில்லை என அலட்சியமாக பதில் கூறியுளளனர்.

இதுபற்றி சமூகஆர்வலர் கூறுகையில் முழுவதுமாக சீரமைத்து உள்ள கருக்கட்டாண்பட்டி கண்மாயில் இன்னும் சில நாட்கள் கூடுதலாக தண்ணீர் விட்டாலே கண்மாய் நிரம்பி ஒரு வருடத்திற்கு உசிலம்பட்டி நகரப்பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர் பஞ்சம் வராது.ஆனால் சீகைக்கருவேல மரங்களால் சூழப்பட்டுள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் விடும் அதிகாரிகள் யாருக்காகவோ கைப்பாவையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.இளைஞர்களின் சாதனையை மறைக்க வேண்டுமென்ற நோக்கில் மதுரை ஆட்சியருக்கும் உண்மைத் தகவல்களை மறைத்து வழங்;கி வருகின்றனர்..இதனால் உசிலம்பட்டி நகரப்பகுதிகளில் இன்னும் சில மாதங்களில் குடிநீர் பஞ்சம் ஏற்ப்படும் அபாயம் உள்ளது.விபரீதத்தை உணராமல் செயற்கை குடிநீர் பஞ்சம் பொதுப்பணித்துறை அதிகாரிகளால் உருவாக்கப்பட்டு வருகிறது.குடிநீர் பஞ்சம் உருவானால் மக்களிடம் அரசுக்கு எதிரான மனநிலை உருவாகுவது உறுதி.அது இன்னும் சில மாதங்களில் நடைபெற இருக்கும் உசிலம்படடி நகராட்சித்தேர்தலில் எதிரொலிக்கும் .திமுக வேட்பாளர்களுக்கு எதிரான நிலைப்பாட்டை மக்கள் கையில் எடுப்;பர்.பண்மா தண்ணீரா எனக் கேட்டால் நீங்களே எதை தேர்வு செய்வீர்கள் என முடிவு செய்து கொள்ளுங்கள் எனக் கூறினர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!