Home செய்திகள்கீழக்கரை செய்திகள் கீழக்கரை நகராட்சியில் வார்டு வரையறையில் குளறுபடி மாற்றி அமைக்க கோரிக்கை…

கீழக்கரை நகராட்சியில் வார்டு வரையறையில் குளறுபடி மாற்றி அமைக்க கோரிக்கை…

by ஆசிரியர்

கீழக்கரை சட்ட விழிப்புணர்வு இயக்கத்தின் மாதாந்திரக் கூட்டம் நேற்று 11.12.2021, இயக்க அலுவலகத்தில் தலைவர் வழக்கறிஞர் முஹம்மது சாலிஹ் ஹூசைன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் செயலாளர் தாஜுல் அமீன், துணை செயலாளர் நூருல் ஜமான், இணை செயலாளர் அகமது மிர்ஷா, பொருளாளர் ஜாபிர் சுலைமான், மக்கள் செய்தி தொடர்பாளர் முகைதீன் இப்ராகீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செயற்குழு உறுப்பினர்கள் செய்யது ரசீன் அகமது, சேகு ஜலாலுதீன் மற்றும் உறுப்பினர்கள் அஹமது ஹுசைன் ஆஷிப், முகம்மது அய்யூப்கான், இஸ்மாயில், அஹமது அஸ்லம், ஹமீது சுல்த்தான் இம்ரான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

1. கீழக்கரை நகராட்சியில் செய்யப்பட்ட வார்டுகள் மறுவரையறையில் இருக்கும் குளறுபடிகளை எதிர்த்தும், 14.12.2018 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் எண் : 407 ஐ இரத்து செய்யக் கோரியும், கீழக்கரை நகராட்சியின் தற்போதைய மக்கள் தொகைக்கேற்ப வார்டுகள் எண்ணிக்கையை உயர்த்திடக் கோரியும், சென்னை உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு தாக்கல் செய்து, சட்ட ரீதியாக போராடி நீதியை பெறுவது என்றும் ஏக மனதாக தீர்மனம் நிறைவேற்றப்பட்டது.

2. கீழக்கரை தாலுகா அரசு பொது மருத்துவமனையினை பொதுமக்கள் முழுமையாக பயன்படுத்தி பயன்பெறுவது சம்பந்தமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதென்றும், அதற்கேற்ப தாலுகா மருத்துவமனையினை மேம்படுத்த அரசு துறையினருக்கு மனு செய்வதென்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

3. கீழக்கரை நகராட்சியில் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் அச்சுறுத்தலாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகள் மற்றும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்துவதோடு, அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கக் கோருவது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்தினருக்கு மனு செய்வது என்றும் ஏக மனதாக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!