தென்காசி அருகே மின்சாரம் தாக்கி உயரிழந்த விவசாயி; மாவட்ட திமுக சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவி.

தென்காசி அருகே மின்சாரம் தாக்கி உயிரிழந்த விவசாயி குடும்பத்திற்கு ஆறுதல் கூறியதோடு திமுக சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியினை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வழக்கறிஞர் பொ.சிவபத்மநாதன் வழங்கினார். தென்காசி அருகேயுள்ள பெத்த நாடார்பட்டி ஊராட்சி செல்லத்தாயார்புரத்தை சேர்ந்த விவசாயி அருள்ராஜ் (31) என்பவர் மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்தார். அவருக்கு மேரிசெல்வா என்ற மனைவியும், பொன்திலீப் (4), பொன்ஹெலினா (4 மாதம்) குழந்தைகளும் உள்ளனர். இது பற்றி தகவல் அறிந்த தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் பொ.சிவபத்மநாதன் அந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறியதோடு மாவட்ட திமுக சார்பில் ரூ.25 ஆயிரம் நிதியுதவியினை வழங்கினார். மேலும் அவரது மனைவிக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை கிடைக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் உறுதியளித்தார். இந்நிகழ்ச்சியில் கீீீழப்பாவூர் ஒன்றிய திமுக செயலாளர்கள் சிவனுபாண்டியன், க.சீனித்துரை, மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்ட இளைஞரணி சரவணன், பேரூர் பொருளாளர் பொன்செல்வன், பெத்தநாடார்பட்டி ஊராட்சித்தலைவர் ஜெயராணி கலைச்செல்வன், நிர்வாகிகள் ஏ.பி.அருள், டால்டன், ஆசீர்ராஜன், ஆல்பின்ராய், பொருள்செல்வன், அந்தோணிராஜ், பால்ராஜ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்