பாப்ரி மஸ்ஜித் இடத்தை மீண்டும் முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க வலியுறுத்திகண்டன ஆர்ப்பாட்டம்.

பாபரி மஸ்ஜிதை சட்டவிரோதமாக இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரியும் மத்திய அரசு மற்றும் நீதித் துறையை வலியுறுத்தியும்!எஸ்.டி.பி.ஐ கட்சி மதுரை வடக்கு மாவட்டம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் கோரிப்பாளையம் பகுதியில் வடக்கு மாவட்ட தலைவர் பிலால் தீன் தலைமையில் நடைபெற்றது…செயலாளர் கமால் பாட்சா, வரவேற்புரை நிகழ்த்தினார்…சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச்செயலாளர் அகமது நவவி, கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்…பொருளாளர் ரகுமான்கான், கிழக்கு தொகுதி தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்…உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஜான் வின்சென்ட்நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட்மாவட்ட தலைவி நர்கீஸ் பாத்திமாபாப்புலர் ஃப்ரண்ட் மதுரை மாவட்ட செயலாளர் இஸ்ஹாக் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்…இறுதியாக மாவட்ட செயற்குழு உறுப்பினர் இம்தியாஸ் அகமது நன்றியுரை நிகழ்த்தினார்..இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள், குழந்தைகள் உட்பட ஏராளமானோர்கள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்