மேல்பெண்ணாத்தூர் அரசு பள்ளியில் பெற்றோர் ஆசிரியர் கூட்டம்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல் பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பெற்றோர் ஆசிரியர்கள் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் விஜய் தலைமையில் நடைபெற்றது. பள்ளி தலைமையாசிரியர் அனைவரையும் வரவேற்று பேசினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் விசாலாட்சி வெங்கடேசன்,  பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கண்ணுப்பிள்ளை , பள்ளி மேலாண்மை குழு தலைவர் அலமேலு கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு குறித்தும் கல்வித் தரம் குறித்தும் கலந்துரையாடினர். மேலும் அனைவருக்கும் கல்வி இயக்கம் மூலம் 1 முதல் 5 வகுப்பு மாணவர்கள் மட்டுமே தமிழக அரசின் இலவச ஆட்டோ வசதி பெறுகின்றனர் 6 முதல் 8 வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்கள் வீட்டிலிருந்து பள்ளி தொலைவில் உள்ள நிலையில்  மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர் . பள்ளி மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி 6 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஆட்டோ வசதி செய்துதர  கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு பெற்றோர்கள் தரப்பில் கோரிக்கை விடுத்துள்ளனர். நிகழ்வில் பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன், அரசு , மகேஸ்வரி, ஆறுமுகம், ராஜாராம், சாந்தி மற்றும் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் பள்ளி ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்