சோழவந்தான் குருவித்துறை அருகே வேலைக்கு சென்ற பெண் மாயம்.

 மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே குருவித்துறை ஊராட்சிக்குட்பட்ட சித்தாதிபுரம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி முத்துப்பாண்டி மனைவி முத்துவைரம் 32.இவர் கடந்த 30-ஆம் தேதி வைகைஆற்றின் வடகரையில் உள்ள தென்னந்தோப்பில் வேலைக்கு செல்வதாக கூறிவிட்டு சித்தாதிபுரம் அருகே வைகைஆற்றில் நடந்து சென்றுள்ளார். வேலைக்கு சென்ற முத்துவைரம் அன்று மாலை வீடு திரும்பவில்லை.இதன்பேரில் இவரது கணவர் முத்துப்பாண்டி காடுபட்டி போலீசில் புகார் செய்தார். முத்துவைரம் வேலைக்குச் செல்லும்போது வைகைஆற்றைக் கடந்து சென்றதால் வைகை ஆற்று வெள்ளத்தில் அடித்துச் சென்று விட்டாரா? என்று சோழவந்தான் தீயணைப்பு நிலைய துணை அலுவலர் மாயகிருஷ்ணன் தலைமையில் தீயணைப்பு படையினர் வைகை ஆற்றில் நேற்று முன்தினம் தேடிவந்தனர் இதில் முத்துவைரம் கிடைக்கவில்லை.இதுகுறித்து காடுபட்டி போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். வைகை ஆற்றைக் கடந்து வேலைக்கு சென்ற பெண் மாயமானார?இல்லை வைகை ஆற்று வெள்ளத்தில் இழுத்துச் சென்று விட்டாரா?என்று கிராமத்தில் பரவலாக பேசி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்