கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்ற வேண்டும் 5 கிராம மக்கள் கோரிக்கை.

மதுரை மாவட்டம் சோழவந்தான் டீ கல்லுப்பட்டி அருகே காரைக்கேணி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்ற வலியுறுத்தி 5 கிராம பொதுமக்கள் கூற்று வங்கியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர் அரசின் நலத்திட்டங்கள் எதுவும் 5 கிராமங்களுக்கும் கிடைக்கவில்லை என்றும் இது சம்பந்தமாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயலாளரை நேரில் சென்று கேட்டால் முறையாக பதில் அளிப்பதில்லை என்றும் பெண்கள் மற்றும் முதியோர்களை தரக்குறைவான வார்த்தைகளில் பேசுவதாகவும் ஆகையால் வங்கி செயலாளரை மாற்ற வேண்டும் என்றும் இல்லையென்றால் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் புகார் அளிக்கப் போவதாக தெரிவித்தனர் கூட்டுறவு வங்கி செயலாளரை மாற்ற வலியுறுத்தி நூற்றுக்கும் மேற்பட்டோர் வங்கி முன்பு திரண்டதால் ஒரே பதட்டமாக காணப்பட்டது…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்