சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் கார் மதுரை விமான நிலைய வளாகத்தில் விபத்து.

ஓமிகிரான் கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலியாக தமிழ்நாட்டில் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதனை அடுத்து மதுரை விமான நிலையத்தில் இன்று தமிழக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியம் மற்றும் சுகாதார துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டில் இருந்து மதுரைக்கு வரும் பயணிகளிடம் இரண்டு தடுப்பு ஊசி செலுத்தி இருந்தாலும் கட்டாயமாக பரிசோதனை செய்து அனுப்ப வேண்டும் என்பது குறித்து சுகாதார குழுவினருடன் மத்திய அரசின் வழிகாட்டுதலின்படி ஆலோசனை கூட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இதனை தொடர்ந்து அமைச்சர் சுப்பிரமணியம் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலம் திருச்சி விமான நிலையம் புறப்பட்டார் அப்போது தமிழக சுகாதார துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் அவரது காரில் மதுரை விமான நிலையத்தில் முக்கிய பிரமுகர்கள் வாகனம் நிறுத்தும் இடத்தில் இருந்து வெளியேறும் பொழுது தடுப்பு கம்பியில் மோதி சிறிய விபத்து ஏற்பட்டது இதில் அதிர்ஷ்டவசமாக சுகாதார துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் எந்தவித காயமும் இன்றி தப்பினார் தொடர்ந்து வேறு கார் மூலம் அங்கிருந்து புறப்பட்டு திருச்சி விமான நிலையம் சென்றார். சம்பவம் விமான நிலைய வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்