சாலைகளில் திரியும் மாடுகளால் அடிக்கடி ஏற்படும் விபத்துகள் – மாடுகளின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்.

மதுரை மாநகர் பகுதி புறநகர் பகுதிகளில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே போவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகிறது, அதிலும் நடுரோட்டில் திரியும் மாடுகளால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் மிகவும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.இதுகுறித்து பலமுறை நடவடிக்கை எடுக்க கோரியும் ரோட்டில் மாடுகள் திரிவது தொடர்கதையாக இருந்து வருகிறது.பெரும்பாலும் மதுரை நகருக்குள் மாடு வளர்ப்போர் அதிகம் உள்ளனர். இவர்கள் தினமும் காலையில் மாடுகளை மேய்ச்சலுக்காக அவிழ்த்துவிடுகின்றனர்அதனால் மாடுகள் சாலைகளில் தெருக்களில் வருகிறது, ஒரு சில மாடுகள் முட்ட வருவதால் பொதுமக்களும் வாகன ஒட்டிகளும் மிகவும் பாதிப்படைகின்றனர்.எனவே மாநகராட்சி / மாவட்ட நிர்வாகம் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்