காரப்பட்டு கிராமத்தில் கிராம சபை கூட்டம். அரசு அதிகாரிகள் கிராம பொதுமக்கள் பங்கேற்பு .

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட காரப்பட்டு கிராமத்தில் கிராம வட்டார வளர்ச்சி குறித்து சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.காரப்பட்டு ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராம சபை கூட்டத்தில் காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் ஜெயந்தி சீனிவாசன் தலைமையில் கிராம வளர்ச்சித் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு, முழுமையாக கிராம ஊராட்சி வளர்ச்சி திட்டம் , கிராம ஊராட்சிகளில் உள்ள வள ஆதாரங்கள், தேவைகள், மேற்கொள்ளப்பட உள்ள பணிகள், நிதிஆதாரங்கள், பிற துறை ஒருங்கிணைப்பு போன்றவற்றை விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக அழைப்பாளராக புதுப்பாளையம் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்தியா பங்கேற்று பஞ்சயாத்து ஆலோசனைகள் வழங்கினார். மேலும்இக்கூட்டத்தில் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் புனிதவள்ளி, ஊராட்சி செயலாளர் அருணகிரி, கிராம நிர்வாக அலுவலர் அருண்பிரசாந்த் மற்றும் காரப்பட்டு ஊராட்சி மன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் , ஊழியர்களும் , தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் சரசு மற்றும் இளநிலை மின் பொறியாளர் , வனத்துறை அலுவலர் , மருத்துவர் செவிலியர் ருக்மணி , நியாய விலை கடை பணியாளர்கள் , அங்கன்வாடி பணியாளர்கள் , சத்துணவு அமைப்பாளர்கள் , மற்றும் காரப்பட்டு ஊர் முக்கிய பிரமுகர்களும் ஊர் பொதுமக்களும் பலர் கலந்து கொண்டனர் .