கருக்கட்டாண்பட்டிகண்மாயை சீரமைத்த 58 கிராம இளைஞர் குழுவினருக்கு மதுரை ஆட்சியர் பாராட்டு.

58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு மீது நம்பிக்கை வைத்து உசிலம்பட்டி நகர் பகுதியில் உள்ள பொதுமக்களின் குடிநீர் ஆதாரமான கருக்கட்டாண்பட்டி கண்மாயை சீரமைப்பதற்கு அனுமதி கடிதம் வழங்கி நேரில் வருகை தந்து தொடங்கி வைத்தார்….கருக்கட்டாண்பட்டி கண்மாயை சீரமைத்து சீமை கருவேல மரங்களை வேரோடு அகற்றி வரத்துக்கால்வாய்களை தூர்வாரி மறுபயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது…அதன் முழு தொகுப்புகளையும் மாவட்ட ஆட்சியரிடம் 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழு சார்பில் ஒப்படைக்கப்பட்டது..ஆவணங்களை பார்த்தவுடன் மாவட்ட ஆட்சியர் அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார்… தன்னலமில்லா நம் 58 கிராம கால்வாய் இளைஞர்கள் குழுவையும் பாராட்டினார்…. மரகன்றுகள் கரைகளில் நடப்பட்டதை கவனித்து இனிவரும் காலங்களில் அனைத்து கண்மாய்களிலும் இது போல் நடுவதற்கு அரசு சார்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என உறுதியளித்தார்….இதுவரை நான் கண்டிராத நீர் ஆதாரங்களை காத்திட முன் வந்துள்ள இளைஞர்கள் நீங்கள்…உங்களுக்காக எப்போதும் நாங்கள் ஒத்துழைப்பு தருவோம் என்று வாழ்த்தினார்…..இவ்வருடம் 58 கிராம கால்வாய் தண்ணீர் மூலம் முழுவதும் நிரப்பி உங்கள் உழைப்பு மக்களுக்கு பயனளிக்க உதவுகிறேன் என்று உறுதியளித்தார்கருக்கட்டாண்பட்டி கண்மாய் சீரமைப்பு பணிக்கு நிதி உதவி வழங்கிய அனைத்து நல் உள்ளங்களுக்கும் இந்நேரத்தில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

உசிலை சிந்தனியா