திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் பாரதியார் பிறந்த தின கவிதைப் போட்டி..

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகம் மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்தும் மகாகவி பாரதியார் பிறந்த நாள் கவிதைப் போட்டிக்கு கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளிடமிருந்து கவிதைகள் வரவேற்கப்படுகின்றன. இது குறித்து திருநெல்வேலி அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் தமிழ்ச் செம்மல் கவிஞர் பேரா ஆகியோர் கூட்டாக அறிவித்திருப்பதாவது: “மகாகவி பாரதியார் பிறந்த நாளையொட்டி திருநெல்வேலி அரசு அருங்காட்சியகமும் பொதிகைத் தமிழ்ச் சங்கமும் இணைந்து மாபெரும் கவிதைப் போட்டி ஒன்றை அறிவித்துள்ளது. இப்போட்டியில் தமிழ்நாட்டிலுள்ள கல்லூரி மற்றும் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகள் கலந்துகொள்ளலாம். கல்லூரியில் படிப்போர் “தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் “என்ற தலைப்பிலும்,பள்ளியில் படிப்போர் “காலத்தை வென்ற மகாகவி “என்ற தலைப்பிலும் கவிதைகளை எழுத வேண்டும். கவிதைகள் 24-வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். கவிதையுடன் தாங்கள் படிக்கும் கல்வி நிறுவனத்தின் பெயர்,ஊர் மற்றும் மாவட்டத்தின் பெயருடன் தங்களது அலைபேசி எண்ணையும் (வாட்ஸ் அப் எண்)தவறாமல் குறிப்பிட்டு அனுப்ப வேண்டும். கல்லூரி மாணவர் மற்றும் பள்ளி மாணவர்கள் ஆகியோர்களின் படைப்புகளிலிருந்து தனித்தனியாக துடிப்பான கவிதை ஒன்று தேர்ந்தெடுக்கப்பட்டு சிறப்புப் பரிசாக 2000- ரொக்கமாக வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைவருக்கும் பங்கேற்புப் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்படும். கவிதைகளை [email protected] என்ற இ மெயிலுக்கு டிசம்பர் 6-க்குள் அனுப்ப வேண்டும்.நெல்லை அரசு அருங்காட்சியகத்தில் வைத்து நடைபெறும் பாரதியார் பிறந்த நாள் நிகழ்ச்சியின் போது பரிசுகளும் பாராட்டுச் சான்றுகளும் வழங்கப்படும். நிகழ்ச்சி நடைபெறும் நாளும் நேரமும் போட்டியாளர்களுக்குத் தெரிவிக்கப்படும். நிகழ்ச்சியில் நேரில் கலந்து கொண்டுதான் பரிசுகளையும் பாராட்டுச் சான்றுகளையும் பெற்றுக்கொள்ள வேண்டும். போட்டி தொடர்பாக மேலும் விபரங்களுக்கு 8903926173 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருநெல்வேலி அரசு அருங்காட்சியக மாவட்டக் காப்பாட்சியர் சிவ.சத்திய வள்ளி மற்றும் பொதிகைத் தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா ஆகியோர் கூட்டாக தெரிவித்துள்ளனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..