சாலையில் தவறவிட்ட தங்கநகை;காவல்துறை உதவியுடன் உரியவரிடம் ஒப்படைத்த நபருக்கு காவல் ஆய்வாளர் பாராட்டு..

சாலையில் கிடந்த தங்க நகையை காவல் துறையினரின் உதவியுடன் உரிய நபரிடம் ஒப்படைத்தவரை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் பாராட்டினார். தென்காசி மாவட்டம் கடையநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மதுரை தென்காசி தேசிய நெடுஞ்சாலையில் தனியார் மருத்துவமனையின் அருகே இஸ்மாயில் என்பவர் பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் தங்க நகை கிடந்துள்ளது. சமூக வலைதளத்தின் மூலம் அறிவிப்பு செய்து அதன் உரிமையாளரை கண்டுபிடித்து அதனை காவல் துறையினரின் முன்னிலையில் உரிய நபரிடம் ஒப்படைக்கப்பட்டது. அடுத்தவரின் பொருளுக்கு ஆசைப்படாமல் அதை உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தோடு தங்க நகையை ஒப்படைத்த இஸ்மாயில் என்பவரை கடையநல்லூர் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சால்வை அணிவித்து தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்தார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்