சோழவந்தான் பகுதியில் கன மழை. 10 ஆண்டுகளுக்கு பிறகு மஞ்சமலை ஆற்றில் வெள்ளபெருக்கு. பொதுமக்கள் விவசாயிகள் மகிழ்ச்சி.

மதுரை மாவட்டம் பாலமேடு, சோழவந்தான் வாடிப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் அதிகாலை முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால் பாலமேடு மஞ்சமலை ஆற்றில் 10 ஆண்டுகளுக்கு பின் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் இங்குள்ள சாத்தியார் அணை நிரம்பி 60 கனஅடி நீர்வரத்து உள்ளதால் அதிகளவு உபரி நீர் வெறியேறி, பாசன கண்மாய்ளுக்கு செல்வதால்இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.மேலும் கனமழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்