கீழக்கரையில் திமுக இளைஞரணி செயலாளர் பிறந்த நாள் நிகழ்ச்சி..

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகர் திமுக இளைஞரணி சார்பில் மாநில இளைஞரணி செயலாளரும் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் 44வது பிறந்த நாளை முன்னிட்டு கீழக்கரை இளைஞரணி அமைப்பாளர் வழக்கறிஞர் ஹமீது சுல்தான் தலைமையில் கீழக்கரை மெடிக்கல் மிஷன் மருத்துவமனையி ரத்த தானம் நிகழ்ச்சி நடைபெற்றது பின்பு முத்துச்சாமி புரம் அரசு தொடக்கப்பள்ளியில் பகிலும் மாணவ-மாணவிகளுக்கு நோட் புத்தகம் இனிப்பு வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில் கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அஹமது முன்னிலை ஏற்றார். இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட கழக பொறுப்பாளருமான காதர்பாட்சா முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் இன்பா ரகு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர் இதில் கீழக்கரை நகர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.