திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்பட்ட 3.6 ரிக்டர் அளவு நிலநடுக்கத்தில் பாதிப்பில்லை ஆட்சியர் அறிவிப்பு

வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் இன்று விடியற்காலை 4.17 மணியளவில் 3.6 ரிக்டர் அளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மீனூர் கொல்லை மேட்டில் ஒரு வீட்டின் சுவற்றில் சிறிய விரிசல் ஏற்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த காரப்பட்டு, வாணியம்பாடி அடுத்த தும்பேரி, ராமநாய்க்கன்பட்டி, அரங்கல்துருகம், சிக்கணாங்குப்பம் லேசான அதிர்வால் எந்த பாதிப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்து உள்ளது.