Home செய்திகள் உசிலம்பட்டி கண்மாய் வந்தடைந்த வைகை நீரை இளைஞர்கள் மலர் தூவி வரவேற்றனர்

உசிலம்பட்டி கண்மாய் வந்தடைந்த வைகை நீரை இளைஞர்கள் மலர் தூவி வரவேற்றனர்

by mohan

வைகை அணையின் நீர்மட்டம் 69அடியாக உயரும் போது உசிலம்பட்டி 58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்து விடப்படும்..இதன் மூலம் உசிலம்பட்டி பகுதியிலுள்ள 35கண்மாய்கள் பாசன வசதி பெறும்.இந்நிலையில் கடந்த13.11.2021 அன்று வைகை 58 கிராம கால்வாயில் திறந்து விடப்பட்ட தண்ணீர் 50 கிமீ தொலைவில் உள்ள உசிலம்பட்டி கணமாயை வந்தடைந்தது.

இதனை விவசாயிகள் மற்றும் இளைஞர்கள் மலர் தூவி உற்சாக வரவேற்றனர்.உசிலம்பட்டி மதகுப்பகுதியில் உள்ள ஷட்டருக்கு மாலை அணிவித்து வணங்கிய 58 கிராம இளைஞர் குழு சௌந்தரபாண்டியன் தலைமையிலான இளைஞர்கள் தண்ணீர் வரும் வரத்துக் கால்வாயில் மலர் தூவி தண்ணீரை வரவேற்று இயற்கை அன்னைக்கு நன்றி செலுத்தினர்.

உசிலை சிந்தனியா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!