ஷேர் ஆட்டோ கவிழ்ந்து விபத்து 3 பேர் காயம் போலீசார் விசாரணை.

மதுரை திருப்பரங்குன்றத்தில் இருந்து காளவாசல் நோக்கி ஷேர் ஆட்டோ ஒன்று வந்து கொண்டிருந்தது அப்பொழுது பழங்காநத்தம் ரவுண்டானா அடுத்துள்ள ஜெயம் தியேட்டர் எதிரே வேகமாக வந்த ஆட்டோ குறுக்கே இருசக்கர வாகனம் ஒன்று வந்ததால் திடீரென பிரேக் அடித்தால் அப்போத எதிர்பாராதவிதமாக ஆட்டோ தலைகுப்புற கவிழ்ந்தது இதில் பயணம் செய்த 4 பேர் இடிபாடுகளில் சிக்கினர் உடனடியாக அக்கம்பக்கத்தினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு 108 அவசர கால ஊர்தி மூலமாக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த தெற்கு வாசல் போக்குவரத்து காவல் ஆய்வாளர் கணேஷ்ராம் சம்பவ இடத்திற்கு விரைந்து போக்குவரத்தை சீர் செய்தால் மேலும் சம்பவம் குறித்து திடீர்நகர் போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்து குறித்து காரணம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் சமீப காலமாகவே ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவிலான ஆட்களை ஏற்றி இதுபோன்ற ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர் என சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டுகின்றனர் நல்வாய்ப்பாக அந்த நேரத்தில் கனரக வாகனம் எதுவும் வரவில்லை பரபரப்பான சாலையில் ஷேர் ஆட்டோ கவிழ்ந்தது பொது மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்