10 லட்சம் ரூபாய் மதிப்பில் குட்கா கடத்திய 2 நபர்கள் கைது..

10 லட்சம் மதிப்பிலான குட்கா கடத்திய இருவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 700 கிலோ குட்காவை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். தென்காசி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் வாகனத்தில் குட்கா கடத்தல் நடைபெறுவதாக காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில்,காவல் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையிலான காவல் துறையினர் தென்காசி திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் இருந்தபோது அவ்வழியாக சந்தேகப்படும் படியாக வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் அரசால் தடை செய்யப்பட்ட ரூபாய் 10 லட்சம் மதிப்பிலான 700 கிலோ குட்கா இருப்பது கண்டறியப்பட்டு, குட்காவை கடத்தி வந்த வாகன ஓட்டுனர் அமரேஸ்வரன், தென்காசியில் வசித்து வரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த பிரதாப் பட்டேல்(39),மற்றும் ரமேஷ் பட்டேல்(19) ஆகிய மூன்று நபர்கள் மீதும் வழக்குப்பதிவு செய்து அமரேஸ்வரன் மற்றும் ரமேஷ் பட்டேல் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து 700 குட்கா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..