மதுரை அருகே டெங்கு நோயால் 7வயது சிறுமி உயிரிழப்பு நோய்த்தடுப்பு பணிகளில் அரசு தீவிரம் காட்ட வேண்டும்முன்னாள் அமைச்சர் வேண்டுகோள்.

மதுரை மாவட்ட ஆட்சியருக்கு முன்னாள் அமைச்சர் ஆர் பி உதயகுமார் எழுதிய கடிதத்தில் கூறியுள்ளதாவதுமதுரை மாவட்டம் , வாடிப்பட்டி அருகே உள்ள போடிநாயக்கன்பட்டி பகுதியைசேர்ந்த சுரேஷ் என்பவரின் 7 வயது மகள் மேகா டெங்குக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில் டெங்குக்காய்ச்சாலால் உயிரிழந்தாக கூறப்படுகிறது . இது அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .மாவட்ட சுகாதாரத்துறையினர் அப்பகுதியில் டெங்கு நோய் தடுப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டுமென பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர் . ஏற்கனவே இது குறித்து 06.11.2021 அன்று தங்களின் கவனத்திற்கு பருவமழை காலத்தில் பரவுகின்ற டெங்கு , சிக்கனகுனியா , மலேரியா , ஜிகா போன்ற நோய்களுக்கு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டி மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்தநிலையில் குழந்தை டெங்குகாய்ச்சலால் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியும் , வருத்தத்தையும ஏற்படுகின்றது . குழந்தையை இழந்து வாடும் குடும்பத்திற்கு அரசு உரிய நிவாரணம் வழங்கவேண்டும் என்பதையும் , இனி இதுபோல் துயரச்சம்பவங்கள் நிகழாதவண்ணம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுகிறேன்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..