மதுரைக்கு வருகை புரிந்த சசிகலாவிற்கு: அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் வரவேற்பு.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மற்றும் மாமன்னர் மருதுபாண்டியர்கள் குருபூஜை விழாவை முன்னிட்டு, மதுரைக்கு வருகை புரிந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள பசும்பொன் தேவர் திருமகனார் திருவுருவச் சிலை மற்றும் தெப்பக் குளத்தில் உள்ள மாமன்னர் மருதுபாண்டியர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர், பசும்பொன் சென்ற சசிகலாவிற்கு மதுரை புறநகர் தெற்கு மாவட்டம் டி. கல்லுப்பட்டி கிழக்கு ஒன்றியக் கழகம் சார்பில், மதுரை விரகனூர் சாலை அருகே வரவேற்பு அளிக்கப்பட்டது. ஒன்றிய கழகச் செயலாளர் பழனி முருகன் மற்றும் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்