செங்கம் அருகே புதூர் மாரியம்மன் கோயில் வளாகத்தில் திருமண மண்டபம் கட்டும் இடத்தில் இரு அமைச்சர்கள் ஆய்வு.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மிகவும் பிரசித்தி பெற்ற புதூர் செங்கம் மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. அதன் வளாகத்தில் சுமார் 2 கோடி மதிப்பில் திருமண மண்டபம் கட்ட உள்ள இடத்தில் தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். நிகழ்ச்சியின் முன்னதாககாஞ்சி கிராமத்தில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பாலசுப்பிரமணியன் திருகோவிலில்இந்து சமய அறநிலை துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு ஆய்வு மேற்கொண்டார் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மற்றும் இந்து சமய அறநிலை துறை அமைச்சருக்கு கோயில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளித்தனர். சாமி தரிசனம் செய்தனர் பின்னர் பாலசுப்பிரமணியர் கோயில் அறங்காவலர் குழு மற்றும் நிர்வாகத்தினர் அமைச்சரிடம் அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை விடுத்தனர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்இந்நிகழ்ச்சியில் தமிழக சட்டப்பேரவை துணை தலைவர் கு. பிச்சாண்டி,மாவட்ட ஆட்சியர் முருகேஷ், நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் ,செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, மாநில மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர் கம்பன், முன்னாள் நகரமன்ற தலைவர் ஸ்ரீதரன், கார்த்திக் வேல்மாறன், புதுப்பாளையம் ஒன்றியக்குழு தலைவர் சி.சுந்தரபாண்டியன், ஒன்றிய கவுன்சிலர்கள் முனியப்பன் பாரதிதாசன் சாந்தமூர்த்தி தீர்த்தமலை மாவட்ட கவுன்சிலர் மனோகரன், காஞ்சி ஊராட்சி மன்ற தலைவர் சரஸ்வதி கோபால் காரப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் எல் ஜெயந்தி லட்சுமணன் என்கிற சீனு புதூர் ஊராட்சி மன்ற தலைவர் சசிக்குமார் துணைத்தலைவர் சேகர் மற்றும் திமுக மாவட்ட ஒன்றிய நகர கிளை கழக நிர்வாகிகள் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்