சுரண்டை காமராஜர் அரசு கல்லூரிக்கு ஆளுயர குத்து விளக்கு; திமுக செயலாளர் வழங்கினார்..

தென்காசி மாவட்டம் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு ஆளுயர குத்து விளக்கை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவபத்மநாதன் தனது சொந்தப் பணத்தில் வழங்கினார். சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரி கடந்த திமுக ஆட்சிக்காலத்தில் 2007-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. தற்போது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் சுரண்டை காமராஜர் அரசு கலைக் கல்லூரிக்கு தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் சிவபத்மநாதன் தனது சொந்த செலவில் ஆளுயர குத்துவிளக்கை கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜெயாவிடம் வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் சுரண்டை நகர திமுக செயலாளர் ஜெயபாலன் முன்னிலை வகித்தார்.கல்லூரி பொறுப்பு முதல்வர் ஜெயா,செனட் உறுப்பினர் வீரபத்திரன்,பீர்க்கான் மனோரஞ்சிதம், மதியழகன் ஆகியோர் வரவேற்றனர். நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர் எம்.பி.எம்.அன்பழகன், சீனித்துரை, நிர்வாகிகள் மாவட்ட பிரதிநிதி ஆறுமுகச்சாமி, என்.எஸ். சுப்பிரமணியன், கூட்டுறவு கணேசன், கடையாலுருட்டி சேர்மன், சசிகுமார், வைகை கணேசன், கே.ஆர்.டி. முருகன், மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்