இராஜபாளையம் பள்ளி மாணவ மாணவிகளுக்கு பாலியல் சட்ட விழிப்புணர்வு.

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் தென்றல் நகர் சாலையில் ராம் நகரில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு இராஜபாளையம் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் மாவட்ட உரிமையியல் நீதிபதி சுமதி. குற்றவியல் நடுவர் வெற்றிமணி ஆகியேர் தலைமையில் குழந்தை கடத்தல் வணிக பாலியல் சுரண்டல் திட்டம் 2015. கீழ் கடத்தல் பற்றி சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வழக்கறிஞர்கள் தங்கதுரை குமார். மகேந்திரன் .கனகராஜ் .செல்வி பாண்டியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் 100க்கு மேற்பட்ட மாணவ மாணவிகளுக்கு குழந்தை கடத்தல் மற்றும் கடத்தல் எவ்வாறு பாதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் இதமாக சிறப்புரையாற்றினர்.

செய்தியாளர் வி காளமேகம்