மதுரையில், பத்திரிகையாளர்களுக்கு விருது.

திரிலோக சஞ்சாரி நாரத முனிவரின் பெயரில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் நாரதர் விருதுகள் இந்தாண்டு மூன்று பத்திரிகையாளர்களுக்கு வழங்கப்பட்டது.நாரதர் ஒரு சிறந்த பத்திரிகையாளர் என்பது தெரியும். இவரது பெயாரல் ராஷ்டிரிய சுயம்சேவக் சங்கம் பத்திரிகையாளர்களுக்கு விருது வழங்கி கெளரவித்து வருகிறது. நடப்பு ஆண்டுக்கான விருது மூத்த பத்திரிகையாளர் எஸ் வெங்கடேசன் சமுக ஊடகவியாளர் மேஜர் மதன் குமார் மூத்த பத்திரிகையாளர் கணேசன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். வெங்கடேசன் தமிழ் ஆங்கில அச்சு மற்றும் காட்சி ஊடகத்தில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். இவர், தற்போது ஆர்கனைசர் என்ற டெல்லியைச் சேர்ந்த வார இதழின் தமிழக செய்தியாளராகவுள்ளார். இதை தவிர விஜய பாரதம் பசுத்தாய் தினசரி ( இணைய வழிசெய்தி தாள் உள்ளிட்ட தமிழ் பத்திரிகைகளுக்கும் எழுதி வருகிறார். மேஜர் மதன் குமார் சமுக ஊடகங்களில் எழுதி வருகிறார். கணேசன் தினமலர் கல்கி மங்கையர் மலர் போன்ற இதழ்களுக்கு கட்டுரைகளையும் எழுதி வருகிறார். இவர் புகைப்பட கலைஞராகவும் உள்ளார்.இவர்களுக்கான விருதுவழங்கும் நிகழ்ச்சியை ஆர் எஸ் எஸ் அமைப்பின் பொதுமக்கள் தொடர்பு பிரிவான விஷ்வ சம்வாத் கேந்திரா கடந்த 26ம் தேதி மதுரை கே கே நகரிலுள்ள பிரபல ராஜ்தானி ஓட்டலில் ஏற்பாடு செய்து இருந்தது.சிறப்பு விருந்தினர் ஓய்வுப்பெற்ற பேராசிரியர் ஞானசம்பந்தன் பேசுகையில்: காலத்தின் அருமையை வலியுறுத்தினார். சமூக ஊடகங்கள் இன்று நம்மை ஆக்ரமித்து விட்டன. அதில் வரும், நல்ல செய்திகளை நாம் அவசியம் படித்து பயன்பெற வேண்டும். அதை நல்ல நோக்கத்துக்கு பயன்படுத்த வேண்டும். தமிழ் படித்தால் வேலை வாய்ப்புகள் குவிந்து கிடக்கின்றன. பத்திரிகையாளராக கட்டுரையாளராக கவிஞராக சமுக ஊடகவியலாளராக ஆசிரியராக வாய்ப்பு உள்ளது.தமிழ் தெரியாது என்ற நிலை இருக்கக் கூடாது. செய்தியை சுருக்கமாக நேரிடையாக சொல்ல வேண்டும். இதற்கு பல உதாரணங்களை கூறி அவர் பேசினார்.பின்னர், விருதுகளை வழங்கி பாராட்டினார். ஏற்புரையில், வெங்கடேசன் பத்திரிகையாளர்களின் இன்னல் வாய்ப்புகள் சந்திக்க வேண்டிய தொழில் சார்ந்த இடையூறுகள் போதிய அங்கீகாரம் இன்மை ஊதிய பிரச்னைகள் குறித்து பேசினார். கம்பராமாயணத்தில் ராமரின் தூதுவனாக சென்ற அநுமன் சீதாபிராட்டியை சந்தித்து சூடாமணியை பெற்று திரும்பினார். அவர் ராமரிடம் தனது பயணம் சீதையை சந்தித்தது அர்க்கர்களை அழித்தது ராவணணை சந்தித்தது போன்ற எதையும் கூறாமால் ராமரை சஸ்பென்ஸில் வைக்காமல் “ கண்டேன் சீதை “ என இரண்டே வார்த்தையில் தமது செய்தியை தெரிவித்தார். இவரும சிறந்த பத்திரிகையாளர்தான் . வரும் ஆண்டுகளில் ஓய்வு பெறும் வயதில் அல்லது ஓய்வு பெற்ற பத்திரிகையாளர் ஒருவரையாவது தேர்வு செய்து அங்கீகரிக்க வேண்டும்.இது வாழ்வின் இறுதி பகுதியில் உள்ள அவர்களை ஊக்குவிக்கும். ஊடகங்களில் தேசிய சிந்தனை கொண்டவர்களை ஆர் எஸ்எஸ், பிஜேபி செய்ய வேண்டும் என பேசினார். அடுத்து பேசிய மதன்குமார் ஊடகங்கள் வாயிலாக இப்போது போர் நடத்தப்படுகிறது. சீனா பல ஜோடிக்கப்பட்ட வீடியோ புகைப்படங்களை வெளியிட்டு மக்களை முட்டாளாக்கி வருகிறது.இதை மக்கள் நம்பி விடுகிறார்கள். இதை நாம முறியடிக்க வேண்டும் என பேசினார்.முன்னுரையில், செய்தியை செய்தியாக தர வேண்டும். அதுதான் பத்திரிகையாளர்களின் லட்சியமாக இருக்க வேண்டும். நாராதர் மூன்று உலகங்களிலும் உடநுக்குடன் செய்திகளை பரப்பி வந்தார். சீரஞ்சிவிகளில் இவரும் ஒருவர் என பேசினார்.சிறப்புரை ஆற்றிய தமிழக கேரளம் பொது மக்கள் தொடர்பு பிரிவின் பிரகாஷ் ஊடகங்கள் சார்பின்றி எழத வேண்டும் என்பதை வலியுறுத்தினார். பல்வேறு இதிகாச நிகழ்கால சம்பவங்களை எடுத்து காட்டி பேசினார்.முக்கிய செய்திகள் வருவதே இல்லை. இந்த குறை களையப்பட வேண்டும் என்றும் அவர் பேசினார்.நிகழ்ச்சியில் தி தமிழ வீக் என்ற இணைய தள வார இதழ் அறிமுகம் செய்யப்பட்டது. என். சேதுமாதவன் நன்றி உரை ஆற்றினார். சந்திரன் சீனிவாசன் பாலாஜி ராம்நாத் குகன் உள்ளிடட முக்கிய பிரமுகர் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..