தேவர் ஜெயந்தியை முன்னிட்டு உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளை சிசிடிவி கேமரா மூலம் போலிசார் கண்காணித்து வருகின்றனர்.

இராமநாதபுரம் மாவட்டம் கழுதியில் வருகின்ற அக்30ம் தேதி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் குருபூஜை விழா நடைபெற உள்ளது.இந்த விழா மதுரை தேனி ராம்நாடு திண்டுக்கல் உள்பட தென் மாவட்டங்களில் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமலிருக்க போலிசார் பலத்த போலிஸ் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.உசிலம்பட்டியின் முக்கிய சாலைகளான பேரையூர் ரோடு தேனி ரோடு மதுரை ரோடு மற்றும் பேருந்து நிலையம் தேவர் சிலை வளாகம் அமைந்துள்ள பகுதிகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு 24 மணி நேரமும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனை உசிலம்பட்டி காவல்துறை துணைக்கண்கணிப்பளர் நல்லு பார்வையிட்டு போலிசாருக்கு ஆலோசனைகள் வழங்கினார்.மேலும் முக்கியப்பகுதிகளில் 100க்கும் மேற்ப்பட்ட போலிசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

உசிலை சிந்தனியா