பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜையினையொட்டி 4 நாட்களுக்கு மதுபானக்கடைகள் அடைப்பு.மாவட்ட ஆட்சித்தலைவர் தகவல்.

மதுரை மாவட்டத்தில், 27.10.2021-அன்று நடைபெற உள்ள மருது பாண்டியர் நினைவு நாள் விழாவும், மற்றும் 30.10.2021-அன்று பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜையும் நடைபெற உள்ளதால், 27.10.2021 முதல் 30.10.2021 வரையிலான 4 நாட்களுக்கு மதுபானக்கடைகள் அடைப்பு என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.27.10.2021-அன்று சிவகங்கை மாவட்டத்தில், நடைபெறும் மருதுபாண்டியர் நினைவு நாள் மற்றும் 30.10.2021-அன்று இராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறும் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் திருமகனாரின் ஜெயந்தி மற்றும் குருபூஜை தினம் ஆகியவற்றை முன்னிட்டு, மதுரை மாவட்டத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலை நாட்டும் பொருட்டு, மதுரை மாவட்டத்தில் தமிழ்நாடு வாணிபக் கழகம் மூலம் நடத்தப்படும் அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் , அதனுடன் இணைந்த மதுக்கூடங்கள் மனமகிழ் மன்றங்கள், உணவு விடுதியுடன் கூடிய மது அருந்தகம், தேசிய மாணவர் படை அங்காடி கேண்டீன்) படை வீரர் கேண்டீன், ஆகியவை 27.10.2021 முதல் 30.10.2021 வரையிலான நான்கு நாட்கள் மூடப்பட்டு இருக்கும்.மேற்படி தினத்தில், மது விற்பனை தொடர்பான விதிமீறல்கள் ஏதும் நடைபெறாமல் கண்காணிக்க அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்
பட்டுள்ளது.மேற்படி, தினத்தில் மதுபான சில்லரை விற்பனை எதுவும் நடைபெறாது என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் தெரிவித்துள்ளார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்