தென்காசியில் அரபிக் கல்லூரி கட்டும் பணி தொடர அனுமதிக்க வேண்டும்; இந்திய தேசிய லீக் வலியுறுத்தல்..

தென்காசியில் நடைபெற்று வரும் அரபிக் கல்லூரி கட்டுமானப்பணி தொடர்ந்து நடைபெற அனுமதிக்க வேண்டுமென இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் தடா. ஜெ அப்துல் ரஹீம் கோரிக்கை விடுத்துள்ளார். தென்காசி மாவட்ட பகுதிகளில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வருகை தந்த இந்திய தேசிய லீக் கட்சியின் மாநிலத் தலைவர் தடா அப்துர்ரஹீம் குற்றாலத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது கூறியதாவது: தென்காசியில் உள்ள அரபிக் கல்லூரியையும், அதன் கட்டுமான வேலைகளையும் நிறுத்தச் சொல்லி சிலர் கொடுத்த கோரிக்கை மனுவை ஏற்று மாவட்ட நிர்வாகம் அதன்மீது நடவடிக்கை எடுத்து வருகிறது. இது தவறான நடவடிக்கை ஆகும், தென்காசியில் கடந்த 20 ஆண்டுகாலமாக இஸ்லாமிய மாணவ, மாணவிகளின் நலனுக்காக செயல்பட்டு வரும் அரபிக் கல்லூரியை தவறான நோக்கத்தில் சிலர் மனு கொடுப்பதால் அதனை இடமாற்றம் செய்யவும், அங்கு நடைபெறும் கட்டுமானப் பணிகளை நிறுத்த சொல்வதும் நியாயமானது அல்ல. எனவே மாவட்ட நிர்வாகம் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. தென்காசியில் தொடர்ந்து செயல்பட்டு வரும் அரபிக் கல்லூரியை இடமாற்றம் செய்வது மற்றும் அதன் கட்டுமான பணிகளை நிறுத்துவது என்பது தவறான முன் உதாரணம் ஆகிவிடும். எனவே தென்காசி மாவட்ட நிர்வாகம் இதன் மேல் எடுக்கும் நடவடிக்கையை உடனே நிறுத்த வேண்டும். மேலும் தமிழகத்தில் ஆயுள் தண்டனை பெற்று நீண்ட காலமாக சிறையில் இருக்கும் கைதிகளை விரைவில் விடுதலை செய்ய வேண்டும் என்றும் தமிழ் தேசிய அரசியல் என்ற பெயரில் சீமான் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பிரச்சாரம் செய்து வருவதை உடனே நிறுத்த வேண்டும் எனவும் அப்போது அவர் கூறினார். இந்த சந்திப்பின் போதுஇந்திய தேசிய லீக் கட்சியின்மாநிலத் துணை தலைவர் சுலைமான் சேட்.செயற்குழு உறுப்பினர் வாவாசி ஜலீல், மாவட்டத் தலைவர் அஹமது,இந்திய தேசிய லீக் கட்சியின் தென்காசி மாவட்டச்செயலாளர் பீர்முஹம்மது, மாவட்ட பொருளாளர் ரபீக், மாவட்டத் துணைத் தலைவர் ராஜா, தென்காசி நகர தலைவர் தாரிஸ்‌, செயலாளர் பாசில், பொருளாளர் ஆதம், தென்காசி நகர இளைஞரணி பாரூக் பாசித், கடையம் ஒன்றிய சித்திக் அலி ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்