வேலூரில் காவலர்களுக்கு வீரவணக்கம்எஸ்.பி.செல்வக்குமார் அஞ்சலி.

தமிழ்நாடு முழுவதும் பணியின்போது வீர மரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது.வேலூர் காவல் ஆயுதப்படை பயிற்சி மைதானத்தில் வீரமரணம் அடைந்த காவலர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வண்ணம் துப்பாக்கி குண்டுகள் முழங்க அஞ்சலியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார் செலுத்தினார்.ஏ.எஸ்.பி ஆல்பர்ட் ஜான், டி.எஸ்.பிக்கள், இன்ஸ்பெக்டர்கள், வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சீனிவாசன் மற்றும் காவல் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.