தென்காசி மாவட்ட அரசு மருத்துவமனையில் மார்பக புற்றுநோய் குறித்த கருத்தரங்கம்..

தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிங்க் அக்டோபர் மார்பகப் புற்றுநோய் கருத்தரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. 21.10.21 வியாழக்கிழமை காலை 9 மணிக்கு தொடங்கிய கருத்தரங்கு மாலை 5 மணி வரை நடைபெற்றது. அரசு மருத்துவமனை மருத்துவர்கள், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்கள், இந்திய மருத்துவ சங்கம் மருத்துவர்கள் என சுமார் 112 மருத்துவர்கள் கலந்து கொண்டனர். இதில் குழந்தைகள் நல மருத்துவர் மருத்துவர் கீதா அனைவரையும் வரவேற்று பேசினார். ஒன்பது மருத்துவர்கள் மார்பகப் புற்றுநோய் பற்றியும்,அதனை தடுக்கும் வழிமுறைகள் பற்றியும் விளக்கிக் கூறினார்கள். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக இணை இயக்குனர் நலப்பணிகள் மருத்துவர் வெங்கட்ரங்கன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் மருத்துவர் ஜெரின் இவாஞ்சலின், மருத்துவர் சுவர்ணலதா, மருத்துவர் விக்னேஷ் சங்கர், மருத்துவர் இர்பான் உல்ஹக், மருத்துவர் அல்மாஸ் பானு, மருத்துவர் ஷமிமா, மருத்துவர் முத்துக்குமாரசாமி, மருத்துவர் புனிதவதி, ஆயிஷா மருத்துவர் மேனகா ஆகியோர் மார்பகப் புற்றுநோய் பற்றிய சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தினார்கள். இந்த கருத்தரங்கில் மருத்துவமனை கண்காணிப்பாளரும் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட தலைவரும், மாநில செயலாளருமான (DMS wing) மருத்துவர் ஜெஸ்லின் அனைத்து பேச்சாளர்களையும், கலந்து கொண்ட அரசு டாக்டர்கள் சங்க உறுப்பினர்களையும் வாழ்த்திப் பேசினார். நிகழ்ச்சியில் அரசு டாக்டர்கள் சங்க மாவட்ட செயலாளர் (DPH) மருத்துவர் முஹம்மது இப்ராஹிம் கலந்து கொண்டு இன்றைய கருத்தரங்கில் 30 மருத்துவர்கள் அரசு டாக்டர்கள் சங்கத்தில் உறுப்பினர்களாக புதிதாக சேர்ந்துள்ளனர் என்றார். கருத்தரங்க நிகழ்ச்சிகளை மருத்துவர் ஆலிஸ் ரூத் மேரி மற்றும் மருத்துவர் கோபிகா இருவரும் இணைந்து தொகுத்து வழங்கினர். காது மூக்கு தொண்டை மருத்துவ நிபுணர் மருத்துவர் மணிமாலா நிகழ்ச்சி ஏற்பாடுகள் செய்த மருத்துவமனை நிர்வாகத்திற்கும், அனைத்து ஏற்பாடுகளையும் முன்னின்று நடத்திய மருத்துவர் லதா, மருத்துவர் மல்லிகா, மருத்துவர் கார்த்திக் ஆகியோருக்கும், பேச்சாளர்கள்,கலந்து கொண்ட மருத்துவர்கள் மற்றும் சுமித் பணியாளர்கள் அனைவருக்கும் நன்றி கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்