கலை வழி கொரோனா தடுப்பு விழிப்புணர்வு..

தென்காசி மாவட்டம் செங்கோட்டை தாலுகா வல்லம் கிராமம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், கலைவழி கொரோனா தடுப்பு பிரச்சார விழா 20-10-2021புதன் கிழமை காலை 11 மணி அளவில் நடைபெற்றது. இவ் விழாவில் தென்காசி மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் மருத்துவர் M. அனிதா, மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் R. ஜெஸ்லின் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களை CRY களப்பணியாளர்கள் சார்பில் வேலம்மாள் வரவேற்று பேசினார். கொரோனா தடுப்பு விழிப்புணர்வு கலைவழி பிரச்சாரத்தின் நோக்கம் குறித்து மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ( CRY திட்ட பணிகள் ) மா .பரதன் விளக்கிக் கூறினார்

.கலைவழி பிரச்சாரத்தை தென்காசி மாவட்ட மருத்துவ கண்காணிப்பாளர் மருத்துவர் R.ஜெஸ்லின் கலைவழி பிரச்சாரத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார். பின்னர் மக்களுக்கு தடுப்பூசி பற்றிய விழிப்புணர்வு குறித்து உரை நிகழ்த்தினார். அதில் குறிப்பாக இளைஞர்கள் தடுப்பூசி போடுவதில் ஆர்வம் காட்ட வேண்டும். வீட்டிலும் ஊரிலும் உள்ள பெரியோர்களையும் சிறியோர்களையும் தடுப்பூசி போட ஊக்குவிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இரண்டாவது அலையின் போது தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கு, இணை நோய்கள் இருந்தாலும் பாதிப்பு அதிகம் ஏற்படவில்லை எனக் கூறினார். தடுப்பூசி போட்டுக் கொண்டதால் இதுவரை யாருக்கும் எந்த பக்க விளைவுகளோ, பின் விளைவுகளோ ஏற்படவில்லை, எனவே தைரியமாக அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றார். நிகழ்வில் தொடர்ந்து வல்லம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் மல்லிகா அவர்கள் சிறப்புரை ஆற்றினார். கொரோனா தடுப்பூசிகளை கலைவழி பிரச்சாரம் செய்யும் குழந்தைகள் உரிமை நீங்களும் Cry அமைப்பிற்கு நன்றி தெரிவித்தார். இணை நோய் உள்ளவர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்றும் ,நமது குழந்தைகள் கொடிய நோயிலிருந்து காப்பாற்ற நாம் தடுப்பூசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம் என தடுப்பூசியின் அவசியத்தை வலியுறுத்தி பேசினார். கலைக் குழுவினர், கரகாட்டம் பாடல்கள் மூலமாகவும், ஒயிலாட்டம் , கரகாட்டம், பறையாட்டம், நாடகம் மூலமாக மக்களுக்கு தடுப்பூசி அவசியம் குறித்து கலைவழி பிரச்சாரம் நடைபெற்றது. இந்தப் பிரச்சார கூட்டத்தில் 150க்கும் மேற்பட்ட பெண்கள் இளைஞர்கள் முதியவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பெற்றனர். இவ்விழாவில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் முகமது இப்ராஹிம், சுகாதார ஆய்வாளர் ஜெயராமன், கிராம சுகாதார செவிலியர் கலைவாணி மற்றும் அங்கன்வாடி அமைப்பாளர்கள், உதவியாளர்கள் கலந்து கொண்டனர். விழாவினை தலித் பெண்கள் எழுச்சி இயக்க பொறுப்பாளர்கள், அருந்ததி பெண்கள் எழுச்சி இயக்க பொறுப்பாளர்கள் ஏற்பாடு செய்ய உதவினர். இந்நிகழ்ச்சியில் CRY களப்பணியாளர் செல்வி p.தங்கம் நன்றி கூறி துவக்க விழா நிறைவு பெற்றது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்