சாலை சீரமைக்க மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை

மதுரை மாநகரில் சமீபகாலமாக நல்ல மழை பெய்து வருகிறது. இதனால் சாலையில் நீர் தேங்கி பல இடங்களில் மேடு பள்ளங்கள் ஆக உள்ளது. இதனால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் பள்ளங்களில் தேங்கியுள்ள நீரில் இருசக்கர வாகன ஓட்டிகள் கவனிக்காமல் வாகனத்தை செலுத்தும் போது பலமாக இருப்பதால் கீழே விழுந்து காயம் ஏற்படுகிறது. இதுபோன்ற சம்பவம் இன்று மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 76 வது வார்டு நேருநகர் நேதாஜி மெயின் ரோட்டில் இருசக்கர வாகன ஓட்டி ஒருவர் வாகனத்தை இப்போது நீர் இருந்தால் பள்ளம் இருப்பது தெரியாமல் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். இது போன்ற சம்பவங்களை தவிர்க்க மேலும் பெரும் அசம்பாவிதம் நடக்கும் முன் மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் தற்காலிகமானது சாலைகளை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது .மாநகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்