மதுரை பெருங்குடி அருகே வீட்டில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகாவிற்கு உட்பட்ட பெருங்குடி பகுதியிலுள்ள சௌராஷ்டிரா காலனியை சேர்ந்தவர் சைமன் இவர் தமிழ்நாடு காங்கிரஸ் மனித உரிமை துறையின் மாநில பொதுச் செயலாளராக உள்ளார். இவர் தனது காரை வீட்டு அருகே உள்ள செட்டில் நேற்றிரவு நிறுத்தியுள்ளார். இன்று காலை அங்கு நியூஸ் பேப்பர் போடுவதற்காக வந்த நபர் காரிலிருந்து புகை வருவதாக கூறியுள்ளார்.இதனை அடுத்து கார் சாவியிலுள்ள ரிமோட்டை வைத்து காரை அன்லாக் செய்துள்ளார் சைமன் அப்போது கார் திடீரென்று தானாக நகர்ந்து அருகே இருந்த முட்புதரில் முட்டி நின்றுள்ளது. மேலும் சாவியை வைத்து காரை திறக்க முற்பட்ட பொழுது கார் முழுவதுமாக தீப்பற்றி எரிய தொடங்கியது. எனவே தீயை அணைக்க முயற்சி செய்தும் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. எனவே இதுகுறித்து சைமன் அவனியாபுரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்க உள்ளார். வீட்டின் வாசலில் நின்று கொண்டிருந்த கார் திடீரென்று தீப்பிடித்து எரிந்தது இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்