இராஜபாளையத்தில் இரண்டு ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் பதவி ஏற்பு.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட இரண்டு வார்டுகளில் காலியாக இருந்ததால் தற்போது நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது இந்த இரண்டு வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது 13வது வார்டு மற்றும் 15 வார்டு உறுப்பினர்கள் தேர்தல் நடைபெற்று இதில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுகவைச் சேர்ந்த காமராஜர் மற்றும் இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் பகத்சிங் இருவரும் போட்டியிட்டு வெற்றி பெற்றனர் அவர்களுக்கு ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி நாகரத்தினம் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார் யூனியன் சேர்மன் சிங்கராஜ் அவர்கள் தலைமை ஏற்றார் நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார் யூனியன் துணைத் தலைவர் திரு துரை கற்பகராஜ் மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் நவமணி கிழக்கு ஒன்றிய செயலாளர் சரவணன் மற்றும் கவுன்சிலர்கள் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர் இந்த நிகழ்ச்சியில் பதவிப்பிரமாணம் ஏற்றுக் கொண்ட இரண்டு கவுன்சிலர்களும் வாக்களித்த மக்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றியும் தெரிவித்துக் கொண்டனர்..

செய்தியாளர் வி காளமேகம்