வேலூர் ஸ்ரீபுரம் தங்க கோவிலில் கிராமபுற மாணவர்களுக்கு உதவிதொகை வழங்கும் விழா

வேலூர் மாவட்டம் அரியூரில் ஸ்ரீபுரம் தங்க கோவில் உள்ளது. இதன் ஸ்தாபராக சக்தி அம்மா உள்ளார். சக்தி பீடம் மூலம் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.வித்யாநேத்ரம் திட்டத்தின கீழ் கிராமபுற மாணவ-மாணவிகளுக்கு மருத்துவம், பொறியியல் படிப்பவர்களுக்கு உதவிதொகை வழங்கும் விழா நேற்று ஸ்ரீபுரம் சக்தி பீடத்தில் நடந்தது.நிகழ்ச்சிக்கு ஸ்ரீபுரம் ஸ்தாபகர் சக்தி அம்மா தலைமை தாங்கினார்.சிறப்பு அழைப்பாளராக தமிழக நல்வாழ்வு மற்றும் சுகாதார துறை அமைச்சர் ம.சுப்பிரமணி கலந்துகொண்டு சக்தி அம்மாவுடன் இணைந்து மாணவ-மாணவிகளுக்கு உதவிதொகையை காசோலையாக வழங்கினார்.திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நந்தகுமார், பீட மேலாளர் சம்பத் உள்ளிட்ட கோவில் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.